தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசலுக்கு ரூ.2.50 காசும் உயர்கின்ற!!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் டீசலுக்கான பயன்பாடுகள் குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை பயன்பாடு முற்றிலும் குறைந்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 காசும், டீசல் 2.50 காசும் உயர்கின்றது. இது நாளை முதல் அமலுக்கு வருவதால், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில், பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரி 28% லிருந்து 34% ஆகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி 20% லிருந்து 25% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசும் உயரும் என தெரிவித்துள்ளது.