தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தும் உரையாடல்கள் மெல்ல எழுந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டாணாக்காரன் என்ற திரைப்படம் காவல்துறை மத்தியில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்தை பெரும்பாலான காவலர்களின் விழிப்புணர்வுக் கூட்டத்தில் திரையிடப்பட்டது. காவலர்களின் மன அழுத்தங்களை போக்கும் வகையில் வார விடுமுறை, பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், யதார்த்தத்தில் அதன் குரூரம் வேறுமாதிரியாகவே இருக்கிறது.!
தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தின் பள்ளிகளின் அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பாதுகாக்க சுழற்சி முறையில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், புவனகிரியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆயுதப்படைக் காவலராக பணியாற்றி வந்த பெரியசாமி, பணியில் இருந்த போது திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து துணைக் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க | பாவம் போலீஸ்.. அவங்க பிரச்சனையை யார்தான் பேசுறது??
அத்துடன், குடும்ப நெருக்கடி ஏதேனும் காரணமாக என சிதம்பரம் நகர போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் பெரியசாமிக்கு அடுத்தமாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல், பணிச்சுமை காரணமா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
( உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தமிழ்நாடு அரசு உதவி மையம்: 104 )
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR