புதுடெல்லி: தமிழகம் முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 12, 2022) திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மொத்தம் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோதி (PM Modi) இன்று திறந்துவைக்கிறார். இதில், சுமார் ரூ.2,145 கோடி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
“இந்த மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது, மருத்துவக் கல்விக்கான செலவை குறைத்து, தரத்தை மேம்படுத்துவதற்கும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான முயற்சிக்கு ஏற்ப உள்ளது” என்று பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
At 4 PM tomorrow, 12th January, 11 new medical colleges will be inaugurated in Tamil Nadu. These medical colleges will augment health infrastructure and ensure affordable healthcare to the people of Tamil Nadu. https://t.co/s1JWwelAo3
— Narendra Modi (@narendramodi) January 11, 2022
மாலை 4 மணிக்கு தொடங்கும் மெய்நிகர் நிகழ்வின் போது, விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைக்கிறார்.
ALSO READ | தொற்றின் எதிரொலி: தனியார் நிறுவன ஊழியர்கள் WFH செய்ய அரசு உத்தரவு
சுமார் 4,000 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான செலவில், சுமார் ரூ.2,145 கோடியை மத்திய அரசும், மீதித் தொகையை தமிழக அரசும் வழங்கியுள்ளன.
1,450 இடங்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள், 'தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல்' என்ற மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிறுவப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுகின்றன.
ALSO READ | சிறப்பு பெயர்களால் அறியப்படும் இந்திய பட்ஜெட்கள்
சென்னையில் உள்ள செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் (Central Institute of Classical Tamil) புதிய வளாகத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
24 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தில் விசாலமான நூலகம், மின் நூலகம், கருத்தரங்கு அரங்குகள் மற்றும் மல்டிமீடியா அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன.
“இந்திய பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பாதுகாக்கவும், செம்மொழிகளை மேம்படுத்தவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சென்னையில் செம்மொழித் தமிழ் நிறுவனத்தின் (Central Institute of Classical Tamil) புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது” என்று PMO வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | CICT: தொல்காப்பியம் இந்தி மொழியில்! கன்னடத்தில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR