RS Bharathi: பாஜகவினரே போதை பொருள் விற்பனையில் அதிகம் கைதானவர்கள் - ஆர் எஸ் பாரதி

RS Bharathi: போதைப் பொருள் கடத்தலில் இந்தியா முழுவதும் அதிகம் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பாஜகவினர் தான் என ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 4, 2024, 03:35 PM IST
  • பாஜகவினர் போதை பொருள் கடத்தலில் கைது
  • திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி
  • எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு உறுதி
RS Bharathi: பாஜகவினரே போதை பொருள் விற்பனையில் அதிகம் கைதானவர்கள் - ஆர் எஸ் பாரதி  title=

கடலூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதானவர்களில் அதிகமானோர் பாஜகவை சேர்ந்தவர்கள் என குற்றம் சாட்டினார். ஐடி விங் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, " அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக திமுக மீது போதை பொருள் குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி வைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்பதை அவர் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். தமிழகம் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது இதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தான் ஏதோ போதை அதிகமாக இருப்பதாக கூறுகிறார். ஒரு விரலில் சுட்டிக்காட்டும் போது மூன்று விரல் தன்னை சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் படிக்க | பிரதமர் இந்த காரணத்திற்காக தான் தமிழகம் வருகிறார் - முதல்வர் ஸ்டாலின்!

அதானி துறைமுகத்திலிருந்து தான் அதிக அளவில் போதைப்பொருள் வெளியே வருகிறது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களிலே பிஜேபி காரர்கள் தான், என்னால் ஆதாரத்துடன் கூற முடியும். அதிமுக ஆட்சியில் டிஜிபி மற்றும் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை  மறந்துவிட்டார்கள். திமுகவின் மீது தற்பொழுது திசை திருப்பி வருகின்றார்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஆர் எஸ் பாரதி, " யாரோ ஒருவர் செய்திருக்கிறார் என்பதற்காக உடனடியாக அவர் 24 மணி நேரத்திற்குள் கட்சியிலிருந்து நீர்க்கப்பட்டார். இந்த நிலையில் இதுவரையும் விஜயபாஸ்கர் மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்தாரா அல்லது டிஜிபி மீது நடவடிக்கை எடுத்தாரா?. இந்தியா முழுவதும் போதை பொருள் கடத்துபவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது.பிஜேபி யார் யார் உள்ளனர் எந்த மாநிலத்தில் இருந்து போதைப்பொருள் கடத்துகின்றனர் என்ற பட்டியல் உள்ளது. 570 கோடி கண்டெய்னரில் பிடிக்கப்பட்டது.அது குறித்து திமுக வழக்கு போட்டு, சட்டமன்ற தேர்தலும் முடிந்து பாராளுமன்ற தேர்தலும் வந்துவிட்டது இதுவரை சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை." என கூறினார்.

மேலும், " மோடி முனிசிபாலிட்டி தேர்தலுக்கு வருவது போல தமிழ்நாட்டிற்ககு வந்து கொண்டிருக்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் இந்த கூட்டணி மீது ஏதாவது உடையும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். 2019-ல் அமைக்கப்பட்ட கூட்டணி இன்று வரையில் உள்ளது. இதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதுவரையில் ஒரு சல்லிக்காசாவது கொடுப்பதாக கூறியுள்ளாரா?, தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் ஏதாவது ஒதுக்குவேன் என அவர் கூறினால் அவர் உண்மையான அரசியல்வாதி. போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஐடி பிரிவினர் மீது குற்றச்சாட்டுகளை வைத்து எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நீதிமன்ற வழக்கு தொடரப்படும்" என்றும் ஆர்எஸ் பாரதி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி போராட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News