புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழகத்தில் இருக்கும் 21 ஆதீனங்களும் கலந்து கொண்டனர். அங்கு சென்ற ஆதீனங்களில் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் செயல்பாட்டை பாராட்டிய அதேவேளையில் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளை தெரிவித்தனர். இது இப்போது தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தில் ஆதினங்கள் செயல்பாடு என்ன? அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுத்தது யார்? என்ற விவாதம் எழுந்துள்ளது. தமிழ் வளர்த்த, பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக பாடுப்பட்ட அதீனங்களுக்கு திராவிட அரசியல் தான் பக்கபலமாக இருந்தது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றனர். பிராமணியத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆன்மீக தளத்தில் அங்கீகாரம் கொடுத்த ஆதீனங்கள் இப்போது அரசியல் விளையாட்டில் பலியாகியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நல்லதல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... அதுவும் இந்த காரணத்திற்காகவா?
இது குறித்த சர்ச்சைகளுக்கு விழா ஒன்றில் பேசிய அண்ணாமலை, தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக 21 ஆதீனங்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்றிருந்தார்கள்.இது ஒரு சரித்திர நிகழ்வு. நாசிக்கள் எந்த அளவுக்கு யூதர்களை வெறுத்தார்களோ அந்தளவுக்கு திராவிட கும்பல் பிராமண வெறுப்பை கடைப்பிடித்து வருகிறது. இதை நான் ஏஎன்ஐ செய்கி நிறுவன பேட்டியிலேயே தைரியமாக சொல்லியிருக்கிறேன். இதை சொல்ல எனக்கு எந்த வித அச்சமும் கிடையாது. பிராமணர்களை தேடித்தேடி வேட்டையாடினீர்கள், மிரட்டினீர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தீர்கள்.
(@SVESHEKHER) May 31, 2023
எத்தனையோ பேர் கடவுள் மீது பக்தியுடனும் மரியாதையுடனும் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் நல்லவர்களாக உள்ளனர். பிராமணர்களை வைத்து தமிழகத்தில் ஒரு பெரிய அரசியலே நடக்கிறது. இவை அனைத்தையும் உடைத்து நொறுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என பேசினார். ஆனால் அவரது இந்தக் கருத்தை நடிகரும், பிரதமர் மோடியின் அனுதாபியுமான எஸ்வி சேகர் நம்பவில்லை. மேலும், அவரது கருத்துக்கு பதில் கொடுத்திருக்கும் அவர், அண்ணாமலை திடீரென பிராமணர்களுக்கு ஆதரவாக பேசுவது மேலிடத்தில் இருந்து வந்திருக்கும் அழுத்தத்தால் தான் என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் எழுதியிருக்கும் பதிவில், " நாக்கில் தேனையும் நாடி நரம்புகளில் பிராமண எதிர்ப்பை கொண்டு, மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தால் பேசவைக்கைப்பட்ட ஓட்டு வங்கி" என சாடியுள்ளார்.
மேலும் படிக்க | வரப்பில் டிம்பர் மரங்கள்... வயலில் பாரம்பரிய நெல் ரகங்கள்...வளம் தரும் விவசாயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ