தனக்குத்தானே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Mahashivratri 2024 Celebration : மகாசிவராத்திரியை முன்னிட்டு சத்தியமங்கலம் அருகே வன கிராமத்தில் பக்தர்கள் தனக்குத்தானே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு  

Written by - Yuvashree | Last Updated : Mar 8, 2024, 07:43 PM IST
  • வினோதமான சிவராத்ரி திருவிழா
  • தனக்கு தானேதலையில் தேங்காய் உடைத்துக்கொண்ட பக்தர்கள்
  • முழு விவரம் இதோ!
தனக்குத்தானே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!  title=

Mahashivratri 2024 Celebration : மகா சிவராத்திரியையொட்டி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள அய்யம்பாளையம்  கிராமத்தில்  தொட்டம்மா சின்னம்மா என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தானே தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இவ்விழாவில் கோவை மாவட்டத்தில் உள்ள கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், ஓநாய்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், வன்னிக்காரம்பாளையம், பச்சாபாளையம், பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம், கோவிந்தபாளையம், இடிகரை, வீரபாண்டிபுதூர் கிராமங்களிலிருந்து வந்த 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்  அய்யம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டனர்.

மேலும் படிக்க | அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிட மறுக்கிறார்? பரம ரகசியம் இதுதான்

இன்று மாலை  மகாலட்சுமி மற்றும் பொம்மையன் பொம்மி ஆலயங்களில் அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.  பின்னர் தாரை தப்பட்டை முழங்க 3 ஆலயங்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை பக்தர்கள் எடுத்து கோயிலின் வெளியே வந்து தலையில் உடைத்து வழிபாடு நடத்தினர். காலை வரை அனைவரும் கண்விழித்து மகாசிவராத்திரி விழாவை கொண்டாடினர்.

தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவது குறித்து அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கிராம பெரியவர்கள் கூறுகையில் தலையில் தேங்காய் உடைத்து  வழிபட்டால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய்நொடிகள் அண்டாமல் காப்பாற்றுவதாகவும், அதே சமயம் தவறு செய்தவர்கள் தேங்காய் உடைத்தால் தலையில் வலி ஏற்படுமெனவும், ஆண்டுதோறும் தலையில் தேங்காய் உடைத்து குலதெய்வத்தை வழிபடுவதால் குழந்தைபாக்கியம் மற்றும் நினைத்தது நிறைவேறுவதாகவும் கூறினர். இவ்விநோத திருவிழாவை சுற்றுவட்டார கிராம மக்கள்  கண்டுகளித்தனர்.

மேலும் படிக்க | TVK : கட்சியின் முதல் உறுப்பினர் ஆனார் விஜய்... முதல்முதலாக பேசி வீடியோவும் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News