தமிழக சட்டப்பேரவையில், நாளை, அதாவது பிப்ரவரி 23 ம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ள 2021-22 இடைக்கால பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.
தற்போதைய அ.இ.அ.தி.மு.க (AIADMK) அரசின் பதவிக் காலம், மே, 24ல் நிறைவடைய உள்ள நிலையில், பொது தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறக் கூடும். எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேதல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த விடும், அதன் பின்னர் எந்த அறிவிப்பையும் வெளியிட இயலாது.
இந்நிலையில், தேர்தல் முடியும் வரை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் போன்ற, பல்வேறு அரசு செலவுகளுக்காக இடைக் கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்ட பின், 2021 - 22ம் ஆண்டிற்கான, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தேர்தலை மனதில் கொண்டு, அதிமுக அரசு சில அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என எதிர்ப்பார்ப்பு நிலவுக்கிறது. பொதுவாக, அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் எந்தவொரு புதிய அறிவிப்புகளும் இருக்காது ஏனெனில் இது தொடர்பான அரசு உதர்ரவுகள் எதுவும் வெளியிட முடியாது, ஏனென்றால் தேர்தல்களுக்குப் பிறகு வேறு அரசு பொறுப்பேற்கும் போது, சிலவற்றை புதிய அரசு மாற்றியமைக்கக்கூடும்.
கொரோனா தொற்று (Corona VIrus) பரவல் காரணமாக கலைவனார் அரங்கத்தில் தற்காலிகமாக செயல்படும் சபையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அமர்வு குறுகிய கால அமர்வாக இருக்கக்கூடும்.
கோடைகாலத்தின் உச்சகட்டத்தில் தேர்வுகளை எதிர் நோக்கி இருக்கும் மாணவர்களுக்கும் வாக்காளர்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ஏப்ரல் கடைசி வாரத்திற்குள் வாக்குப்பதிவை முடிக்க வேண்டும் என்று ஆளும் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவும் விரும்புகின்றன. மேலும், இரண்டு திராவிட கட்சிகளும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெறும் நடைமுறையை நிறைவு செய்ய உள்ளனர்.
ALSO READ | Weather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR