நாடுமுழுவதும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.
தமிழகத்தை பொருத்தவரையில் திமுக - அதிமுக இடையே பலத்த போட்டி காணப்பட்டாலும், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் படையெடுப்பு வாக்கு சிதரல்களை ஏற்படுத்தி தேர்தல் கணிப்பில் பெரும் வித்தியாசத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Will be absent tmrw on channels as been hospitalised..will miss the drama unfold tmrw.. my bad.. when you plan something , nature disposes.. very upset.. pic.twitter.com/3meHg4rQjC
— KhushbuSundar (@khushsundar) May 22, 2019
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "வேஷங்கள் கலையும் நாளில் நான் மக்களின் முன் வரமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது. நாம் ஒன்று நினைக்க இயற்கை ஒன்று நினைக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.