நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி, தீ பிடிக்கும் அபாயம்: மீட்பு பணியில் தொய்வு, அதிகாரிகள் திண்றல்!!

லாரியில் இருந்த எத்தனால் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால், அடுத்து சங்ககிரி,வெப்படை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனத்தின் மீது தண்ணீர் பீச்சியடித்து வருகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 9, 2023, 06:40 PM IST
  • எதிர்பாராத விதமாக சாலையோரம் கவிழ்ந்த லாரி.
  • லாரியில் இருந்த எத்தனால் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனத்தின் மீது தண்ணீர் பீச்சியடித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி, தீ பிடிக்கும் அபாயம்: மீட்பு பணியில் தொய்வு, அதிகாரிகள் திண்றல்!! title=

கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை நோக்கி 40 ஆயிரம் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் மூலப்பொருளான எத்தனால் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த விபத்தில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எளிதில் தீ பிடிக்கும் பொருள் என்பதால் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலிருந்து எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பெட்ரோல் எரிபொருள் மூலப்பொருளான எத்தனால் எரிபொருளை சுமார் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ஏற்றிக்கொண்டு  லாரியின் ஓட்டுனர் சுப்பிரமணி கோவை மாவட்டம் இருகூர் பகுதிக்கு ஓட்டி சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையோரம் கவிழ்ந்தது.

லாரியில் இருந்த எத்தனால் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால், அடுத்து சங்ககிரி,வெப்படை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனத்தின் மீது தண்ணீர் பீச்சியடித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Maha Shivarathri: தமிழகத்தில் களைகட்டும் சிவராத்திரி கொண்டாட்டங்கள்! அரசு சார்பில் கோலாகலம்

விபத்து சம்பவம் குறித்து வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு வரை தற்பொழுது போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

namakkal

எத்தனால் பெட்ரோலின் மூலப்பொருள் என்பதால் மீட்பு பணியின் போது ட்ரெயின் வைத்து தூக்கும் பொழுது இரும்பு உராய்வு காரணமாக சிறு தீப்பொறி ஏற்பட்டாலும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை பாதிப்பு இருக்கும் என பெட்ரோல் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது வெளிச்சம் குறைவு காரணமாக ட்ரெயின் மூலம் லாரியை மீட்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். 

இதனால் நாளை காலையில் மீண்டும் மீட்பு பணியினை துவக்க உள்ளனர். இதன் காரணமக அப்பகுதியில் தொடர்ந்து யாரும் செல்போன் பயன்படுத்தவோ, வாகனங்கள் செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டு வருகின்றன.

namakkal

மேலும் படிக்க | Erode By-Election: OPS காலில் விழுந்து கட்சியை ஒப்படைப்பார் EPS! புகழேந்தி சவால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News