Tamil Nadu Latest News: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் அருகே உள்ள தாளம்பள்ளம் பகுதியில் பாஜக ராசிபுரம் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழாவானது நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வைத்து திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இவர், "டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைத்துவது இப்போது அவசியம் இல்லை. விவசாயிகள் போராட்டம் அரசியலுக்காக நடைபெறுகிற போராட்டம். விவசாயிகளின் போராட்டம் என்பது மத்திய அரசின் எதிரியாக உள்ள காங்கிரஸ், எதிர்க்கட்சிகளின் சொறி, செரங்கு, அரிப்பாக உள்ளது.
அதிமுக தாமரை சின்னத்தில்...
தமிழகத்தில் நேற்று கூட பாஜகவை சேர்ந்த நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சட்ட ஒழுங்கு தெரியாதவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். அரசியலுக்காக பரபரப்பை உருவாக்குவதற்காகம், அங்கு ஏதாவது பிணம் விழுமா அல்லது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமா என காங்கிரஸ் கட்சியினரும் மற்ற கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக திமுக சட்டப்பேரவையில் சண்டை உருவாகிறது.
மேலும் படிக்க | சபாநாயகர் அப்படி பேசியிருக்கக்கூடாது, அவரால் தான் வெளியேறினேன் - ஆளுநர்
அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும், பாஜக அதிமுகவுடன் கூட்டணி இல்லை எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி வைக்கப்பட்டால் அதிமுக பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
அநாகரீக வார்த்தையால் விமர்சனம்
செவ்வாழை தோட்டத்தில் செங்குரங்கள் குதித்தாடுகின்றது போல் சட்டசபை உள்ளது. சட்டமன்ற பேரவை தலைவர் சில்லறை, மகா சில்லறை, வாய் தொடுக்க சட்டப்பேரவை தலைவருக்கு எந்த தகுதியும் கிடையாது. சட்டமன்ற பேரவை தலைவராக இருக்க தகுதி இல்லை. அதை சொல்வதற்கு எனக்கு தகுதி உண்டு" என்றார். "சட்டமன்ற பேரவை தலைவர் மானங்கெட்ட பையன்" என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கடுமையான வார்த்தையால் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (பிப். 12) அன்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கினாலும், அரசு தயாரித்து கொடுத்து உரையின் மீது தனக்கு உண்மை மற்றும் தார்மீக ரீதியாக உடன்பாடு இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த உரையை வாசிக்காமல் தவிர்த்தார்.
ஆளுநர் vs அப்பாவு
மேலும், அவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையும், அறிவுரையும் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாகத்தை அவையில் வாசித்த பின்னர் பேசியபோது,"தமிழ்நாட்டில் மக்கள் புயல், வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டபோது ஒன்றிய அரசு ஒரு பைசா கூட நிதி கொடுக்கவில்லை.
பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் நிதியில் இருக்கிறது. பிஎம் கேர் நிதி இந்திய மக்களால் கணக்கெழுத முடியாத, கணக்கு கேட்க முடியாத அந்த நிதியில் இருந்தாவது ஒரு 50 ஆயிரம் கோடி ரூபாயை, ஆளுநர் தமிழ்நாட்டிற்கு வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் என நானும் கேட்கலாமே?" என பேசியிருந்தார்.
அதுமட்டுமின்றி,"சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல இந்த தமிழ்நாட்டு சட்டமன்றமும், தமிழ்நாட்டு மக்களும்" சட்டப்பேரவையிலேயே அப்பாவு பேசியிருந்தார். அப்பாவு இவ்வாறு பேசியவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே அவையில் இருந்து கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அப்பாவு டூ ஆர்என் ரவி: 50 ஆயிரம் கோடி கேட்டு வாங்கி கொடுங்களேன்..! ஆளுநர் ரியாக்ஷன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ