இடைத்தேர்தல் அறிவித்தால் மேல்முறையீடு வாபஸ் -டிடிவி!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்களை சந்திக்க மதுரை வந்துள்ள டிடிவி தினகரன் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவித்தால் மேல்முறையீட்டை வாபஸ் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 27, 2018, 11:34 AM IST
இடைத்தேர்தல் அறிவித்தால் மேல்முறையீடு வாபஸ் -டிடிவி! title=

தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்களை சந்திக்க மதுரை வந்துள்ள டிடிவி தினகரன் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவித்தால் மேல்முறையீட்டை வாபஸ் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட மாதம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது. 

இந்த தீர்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் 18 MLA-க்களும் மதுரையில் ஆலோசனை நடத்தினர். கிடைக்கப்பெற்ற தகவலின் படி வரும் 30-ஆம் தேதி டிடிவி ஆதரவு MLA-க்கள் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆலோசனைக்கு பின்னர் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அவர்கள் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவித்தால் மேல்முறையீட்டை வாபஸ் பெறுவோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் என்னையே ஆதரிக்கின்றனர், உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தங்களுக்கிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Trending News