Lakshmi Vilas வங்கியை DBS வங்கி கையகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கி கையகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 25, 2020, 03:22 PM IST
Lakshmi Vilas வங்கியை DBS வங்கி கையகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் title=

புது டெல்லி: இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கி கையகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ், லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். தி லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் (The lakshmi vilas bank) நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வந்த நிலையில், ஒரு உள்நாட்டு வங்கியை பிணை எடுப்பதற்காக ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது இதுவே முதம்முறையாகும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், டிபிஎஸ் 563 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறை கடன்களில் 1.6 பில்லியன் டாலர் உரிமையைப் பெற்றது.94 வருடமாக இயங்கி வந்த எல்விபி இனி இருக்காத. அதன் பங்கு முழுமையாக அழிக்கப்படும். அதன் வைப்பு இப்போது டிபிஎஸ் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும்.

ALSO READ | Lakshmi Vilas Bank வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது -நிதி அமைச்சகம்

முன்னதாக, ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) டிசம்பர் 16 வரை எல்விபி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்று தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவசர செலவுகள், மருத்துவ சிகிச்சை,  கல்வி கட்டணம் செலுத்துதல், திருமண செலவுகள் என முக்கியமான செலவுகளுக்கு விலக்கும் மற்றும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் அதற்கு ஆர்பிஐ அனுமதி வேண்டும்.

புதிய விதிப்படி, ஒரு வைப்புதாரர் வைத்திருக்கும் அனைத்து வகையான கணக்குகளுக்கும் திரும்பப் பெறும் வரம்பு ரூ .25,000 ஐ தாண்டக்கூடாது. மொத்த தொகை ரூ .25,000 ஐ தாண்டினால், நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். 

லட்சுமி விலாஸ் வங்கியின் இந்த சரிவுக்கு காரணங்கள் என்று பார்த்தால்,  நிகர மதிப்பு எதிர்மறையாக சென்றது முதல் காரணம். அடுத்து, தொடர்ந்து ஏற்பட்ட நட்டங்களை சமாளிக்க போதுமான மூலதனத்தை திரட்ட முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புகளை தொடர்ந்து  திரும்பப் பெற்று வருகின்றனர் என்பதோடு, வங்கியின் பணப்புழக்கமும் குறைந்துவிட்டது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News