விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய மாட்டோம்: முதல்வர் உறுதி

தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இலவச மின்சாரம் என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்பதால், அது ரத்து செய்யப்பட மாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 23, 2020, 05:02 PM IST
  • தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்: EPS
  • எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்பதால், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது: EPS
  • மத்திய அரசிடமிருந்து தமிழகம் கேட்ட நிதி கிடைக்கவில்லை: EPS
  • இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்து ஆர்பாட்டம்: தமிழக காங்கிரஸ் கமிட்டி
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய மாட்டோம்: முதல்வர் உறுதி title=

சேலம்: தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இலவச மின்சாரம் என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்பதால், அது ரத்து செய்யப்பட மாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) உறுதி அளித்துள்ளார்.

இன்று சேலம் மாவட்டத்தில், மேட்டூர் அணை திறப்பு, குடிமராமத்து பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி (Edappadi Palaniswami), அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சேலம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

மேலும் படிக்க: 'வேதா நிலையம்' வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம்...

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி (Edappadi Palaniswami)"  கேட்ட தொகையில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசிடமிருந்து தமிழகம் கேட்ட நிதி கிடைக்கவில்லை; அது படிப்படியாக வழங்கி வருகிறார்கள். தமிழகத்தில் அரசின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு சமூகப்பரவலாக மாறவில்லை. ஆனாலும் கொரோனா தடுப்பு பணியில் நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் தான். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். 

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இலவச மின்சாரம் என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்பதால், அது ரத்து செய்யப்பட மாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) கூறினார். 

மேலும் படிக்க: தமிழகத்தில் ஆட்டோ ரிக்ஷாக்களை இயக்க அனுமதி அளித்தது தமிழக அரசு!

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளதால், விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருக்கிறது. ஏற்கனவே தமிழக காங்கிரஸ் சார்பில் மே 26 ஆம் தேதி இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே‌எஸ். அழகிரி  தெரிவித்துள்ளார்.

Trending News