பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் -19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவானது இன்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் தீர்ப்புக்காக வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து யூடியுபர் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, " சிறையில் நடைபெறும் கொடுமைகளை கண்டித்து புழல் சிறையில் உள்ள youtuber சவுக்கு சங்கர் 2 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனையடுத்து 2 நாள் உண்ணாவிரதத்தை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி முடிக்க வைத்துள்ளனர்.
கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கரை சிறை விதிகளை மீறி 24 மணி் நேரமும் சிறையில் தனியாக காவலரை வைத்து கண்காணித்து வருகின்றனர். சவுக்கு சங்கரின் கையில் இருந்த காயத்திற்கான சிகிச்சை குறித்து புழல்சிறை நிர்வாகத்திடம் கேட்டால் மருத்துவ சான்று இல்லை என கூறி மருத்துவம் அளிக்கவில்லை.
சவுக்கு சங்கரின் மீதான வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்காக நடத்திவருகிறோம். ஆனால், சிறையில் தொடர்ந்து கொடுமைகள் நடைபெறுகிறது எனவும், சிறையில் சவுக்கு சங்கருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுமைகள் நடைபெறுகிறது" என்றார். ஜாமின் கோரிய வழக்கு 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர் என்றார் சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ