ஆப்பிள்: ஐபோன்-7, 7-பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரீஸ்-2 அறிமுகம்

Last Updated : Sep 8, 2016, 11:44 AM IST
ஆப்பிள்: ஐபோன்-7, 7-பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரீஸ்-2 அறிமுகம் title=

ஆப்பிள் நிறுவனம் ஐ போன் 7, ஐ போன் 7 பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 2 ஆகிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல்களான ஐபோன் 7, ஐ போன் 7 பிளஸ், மற்றும் வாட்ச் சீரீஸ் 2 மாடல்கள் அறிமுகப்பட்டுத்தபட்டன. அப்போது ஆப்பிள்  நிறுவனத்தின்  தலைவர் டிம்குக் ஐபோன்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அ) ஆப்பிள் ஐபோன் 7 ல் உலகில் பிரபலமான மரியோ கேம் அறிமுகமாகிறது. மக்கள் அதிகம் இந்த விளையாட்டை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ) உலகம் முழுவதும சமீபத்தில் மிகவும் பிரபலமான ‛போக்கிமேன் கோ' விளையாட்டு ஆப்பிள் வாட்சிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இ) ஐபோன் 7 ‛வாட்டர்- டஸ்ட் புரூப்' வசதியுடன் வருகிறது. இந்த செல்போன் ஜெட் பிளாக், பிளாக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய கலர்களில் வெளியாகிறது.

ஈ) ஆப்பிள் 7 பிளஸ்சில் பின்பக்க கேமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2 லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது. இந்த 2 லென்ஸ் 56.எம்.எம். ஆப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸும்,      வைட் ஆங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

உ) ஐ.ஓ.எஸ். 10 இயங்குதளத்தில் செயல்பட கூடியது.

ஊ) ஸ்டிரியோஸ்பிக்கர் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக ‛வயர்லெஸ் - ஹெட் போன் ' வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபோனில் உள்ள ‛‛சிரி'' வசதி இதில்              மேம்படுத்தப்பட்டுள்ளது.

எ) ஐபோன் 7 ல் வை-பை இணைப்புடன் 14-15 மணி நேரம் செயலில் இருக்கும் அளவிற்கு பேட்டரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஏ) ஐபோன்7-யும் மற்ற ஆப்பிள் தயாரிப்புகளையும் இனைக்கும் வகையில் ஐ-கிளவுட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற ஆப்பிள் தயாரிப்புகளுக்கு பைல் பரிமாற்ற       செய்ய முடியும்.

ஐ) ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ‛ஆப்பிள் பே' வை பயன்படுத்தும் வகையில் ‛என்.எப்.சி.,' டெக்னாலஜி வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம பணபரிமாற்றம்                        செய்யமுடியும்.

ஒ) ஐபோன் 7 பியுசன் பிராசசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிராவுசர் சுமார் 3.3 பில்லியன் டிரான்சிஸ்டர்களை கொண்டு செயல்படுகிறது. இதன் செயல்திறன்கள்          பல மடங்கு அதிகமாக இருக்கும்

ஓ) ஐபோன் 7 ல் புதிதாக 128 மற்றும் 256 ஜி.பி., உள்ளடக்க மெமரியுடன் வெளியாகிறது. குறைந்தபட்சமாக 32 ஜி.பி., போனும் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

 

விலை விவரம்-:

ஐபோன் 7 - 32 ஜி.பி.,யுடன் உள்ள செல்போன் இந்திய மதிப்பில் சுமார் 43 ஆயிரம் ரூபாய் எனவும், ஐபோன் 7 பிளஸ் -32 ஜி.பி., யுடன் உள்ள செல்போன் சுமார் 51 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போன் வரும் செப்டம்பர் 16-ம் தேதி முதல் அமெரிக்க, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் அக்டோபர் 7-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 60 ஆயிரத்திலிருந்து துவங்குகிறது.

 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ்2:

* ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 அறிமுகப்படுத்தப்பட்டது. டிசைனில் எந்த வித மாற்றமும் இல்லாமல் தண்ணிருக்குள்  50 மீட்டர் ஆழம் வரை  ‛வாட்டர் புரூப்'  மற்றும் ‛ஸ்விம் புரூப்'    அம்சம் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. 

* டூயல் - கோர் பிராசசர் உடன் வேகமாக செயல்படும் திறன் கொண்டது. 

* வாட்ச்-ல் ஜி.பி.எஸ்., வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

* ஜாக்கிங் மற்றும் ரன்னிங் பயிற்சி பெறுபவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆப்பிள் நிறுவனம் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பல்வேறு மேம்பாடு கொண்ட       நைக் பிளஸ் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. 

* இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 25 ஆயிரம் ரூபாய்.

Trending News