ஆதாரில் இணைக்கப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்: எப்படி சரிபார்க்கலாம்?

Last Updated : Aug 19, 2017, 03:55 PM IST
ஆதாரில் இணைக்கப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்: எப்படி சரிபார்க்கலாம்? title=

தற்போது அணைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் அவசியமாகி விட்டது.

ஆதாரின் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் முக்கிய காரணியாகும்.

இந்நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை எப்படி சரிபார்க்கலாம்?

பின்வரும் முறையை பின்தொடர்ந்தாள் போதும்:-

https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்

பக்கத்தின் வலது பக்கம் நீல நிற தவழ ஒன்று காணப்படும், அதில் “Verify Email/Mobile Number” -என்பதை தேர்வு செய்க.

அந்த போத்தனை கிளிக் செய்தவுடன் மற்றொரு தாவல் பக்கம் திறக்கப்படும், அதில் "OK" வை கிளிக் செய்யவும்.

பின்னர் மற்றொரு பக்கம் திறக்கப்படும், அதில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

உடனடி ஒருமுறை கடவுசொல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அனுப்பப்பட்ட கடவுசொல்லை இந்த பக்கத்தில் உள்ளிடவும். நீங்கள் உள்ளிட்ட மின்னஞ்சல் உங்கள் ஆதார் தகவலுடன் பொருந்தினால் "Congratulations! The Email ID matches with our records!" எனும் செய்தி உங்களுக்கு காண்பிக்கப்படும்.

இதே முறையை பயன்படுத்தி உங்களது மொபைல் எண்ணையும் சரிபார்க்க முடியும்.

Trending News