Maruti Suzuki Offers: இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களை உருவாக்கும் ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி தனது பல கார்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. மாருதி சுஸுகியின் இந்த கார்கள் சிறந்த அம்சங்கள் மற்றும் தோற்றத்துடன் வருகின்றன.
மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் இந்த கார்களை வாங்கினால் அவற்றில் நீங்கள் ரூ. 48,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். இந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மாருதி ஆல்டோ
நாட்டின் மலிவான கார் என்று கூறப்படும், மாருதி ஆல்டோவின் (Maruti Alto) ஸ்டாண்டர்ட் ட்ரிம்மை வாங்கினால் ரூ. 38,000 வரையிலான நன்மைகளைப் பெறலாம். இது தவிர, மாருதி ஆல்டோவின் Alto Lxi, Vxi மற்றும் Vxi+ வகைகளில் ரூ .43,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். அதன் சிஎன்ஜி வேரியன்டில் ரூ. 18000 தள்ளுபடி கிடைக்கும்.
ALSO READ: வெறும் ரூ.5,000 செலுத்தி Honda WR-V-ஐ புக் செய்யலாம்: இதோ வழிமுறை
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ
மாருதியின் புகழ்பெற்ற கார் மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோவில் (Maruti Suzuki S-Presso) ரூ. 48,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. மாருதி சுஸுகியின் இந்த கார் சிறந்த அம்சங்களுடன் வருகிறது.
மாருதி சுசுகி வேகன்ஆர்
மாருதி சுசுகி நிறுவனத்தின் டால் பாய் என்று அழைக்கப்படும் மாருதி வேகன்ஆர்-ஐ வாங்கினால் ரூ. 17,500 வரையிலான சலுகையை நிறுவனம் வழங்குகிறது. இது மட்டுமல்ல, நீங்கள் மாருதி வேகன்ஆர் சிஎன்ஜி மாடலை வாங்கினால், இதில் ரூ .1500 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட்
நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஹேட்ச்பேக் கார்களில் ஸ்விஃப்ட்டில் இந்த மாதத்தில் நீங்கள் பெரிய தள்ளுபடியைப் பெறலாம். இந்த காரை வாங்கும்போது நிறுவனம் ரூ. 24,500 வரை சலுகைகளை வழங்குகிறது.
மாருதி சுஸுகி டிசைர்
மாருதியின் ஸ்டைலான சப்-காம்பாக்ட் செடான் மாருதி சுசுகி டிசைரிலும் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த கார் வாங்கும் போது ரூ. 19,500 வரை தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சலுகைகளை சரியாகப் பெற நீங்கள் மாருதியின் டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.
ALSO READ: Maruti Suzuki: 1.81 லட்சம் கார்களை திரும்பப் பெறும் மாருதி நிறுவனம்