ஆல்பபெட் நிறுவனத்துக்கு சொந்தமான கூகுள் Search Engine (தேடுபொறி) உலகளவில் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேண்டும் தகவல்களை நொடிப்பொழுதில் கொண்டு வந்து கொடுக்கும் இந்த வெப்சைட்டே மக்களின் ஆஸ்தான தளமாக இருந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஐடி செக்யூரிட்டி நிறுவனமான Cloudflare நடத்திய ஆய்வில், 2021 ஆம் ஆண்டு உலகளவில் அதிகமானோர் சென்ற வெப்சைட் லிஸ்டில் கூகுள் (GOOGLE) 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆச்சரியப்படும் வகையில் டிக்டாக் வெப்சைட் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ALSO READ | 2021-ல் Gaming வேர்ல்டை மாற்றிய டாப் கேம்ஸ்..!
ஷார்ட் வீடியோ செயலியான டிக்டாக் (TIKTOK), 2016 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்ட இந்த செயலி, அபார வளர்ச்சியைப் பெற்றது. சீனாவின் எல்லை அத்துமீறலுக்குப் பிறகு தடை செய்யப்பட்ட இந்த செயலி, ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமாகத் தொடங்கியது. கடந்த ஆண்டு Cloudflare நடத்திய ஆய்வில் 8-வது இடத்தில் இருந்த டிக்டாக், இந்த ஆண்டு முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் அதிகமானோர் பதிவிறக்கம் செய்த செயலிகள் பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ALSO READ | Flipkart சலுகை: வெறும் ரூ.5,000-க்கு இப்படி ஒரு Realme ஸ்மார்போனா?
வழக்கமாக 2வது இடத்தில் இருந்து வந்த பேஸ்புக், இப்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கடுத்த இடங்கள் முறையே ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பிடித்துள்ளன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிப்ரவரி 17, 2021 ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக அதிகமானோர் வருகை தரும் வெப்சைட் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்தது. அடுத்தடுத்த நாட்களில் கூகுள் மீண்டும் முதல் இடத்துக்கு சென்றுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் முதல் இடத்துக்கு வந்த டிக்டாக், அதனை நிரந்தரமாக தக்க வைத்துக் கொண்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR