Realme 320W சூப்பர்சோனிக் சார்ஜ் தொழில்நுட்பம்... வெறும் 5 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும்

ரியல்மீ நிறுவனம் 320W சூப்பர்சோனிக் சார்ஜ் ( 320W SuperSonic Charge) எனப்படும் புதிய வகை அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2024, 03:30 PM IST
  • 320W சார்ஜர் தொழில்நுட்பம் மூலம் ஒரு நிமிடத்தில் ஃபோனை 26% வரை சார்ஜ் செய்ய முடியும்.
  • பேட்டரி சேதமடைவதைத் தடுப்பதோடு மிகக் குறைந்த அளவில் மின்சாரத்தை மட்டுமே வீணாகிறது.
  • புதிய வகை தொழில்நுட்பம் வயர் இல்லாமல் போனை சார்ஜ் செய்கிறது.
Realme 320W சூப்பர்சோனிக் சார்ஜ் தொழில்நுட்பம்... வெறும் 5 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் title=

ரியல்மீ நிறுவனம் 320W சூப்பர்சோனிக் சார்ஜ் ( 320W SuperSonic Charge) எனப்படும் புதிய வகை அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 320W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம், போனை 4 நிமிடங்கள் 30 வினாடிகளில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்று ரியல்மீ (Realme) நிறுவனம் கூறுகிறது.

Realme உலகின் முதல் வேகமான சார்ஜிங் தொழில்நுட்ப அறிமுகத்துடன், 4,420 mAh ஆற்றலை கொண்ட புதிய வகை பேட்டரியையும் (Smartphone Battery) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேட்டரியின் ஒவ்வொரு கலமும் 3 மில்லிமீட்டர் என்ற அளவிற்கு மெல்லியதாக இருந்தாலும், பழைய வகை பேட்டரியை விட 10% அதிக ஆற்றலை அளிக்கிறது. நான்கு செல்கள் கொண்ட உலகின் மடிக்கக் கூடிய வகையிலான முதல் பேட்டரி இதுவாகும்.

சீனாவில் நடந்த 828 ரசிகர் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 320W சார்ஜர் தொழில்நுட்பம் மூலம் ஒரு நிமிடத்தில் ஃபோனை 26% வரை சார்ஜ் செய்ய முடியும். மேலும் ஃபோனை 50%க்கு மேல் சார்ஜ் செய்ய இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும். இதுவே உலகின் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் என ரியல்மீ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் நீண்டநாட்களுக்கு ராக்கெட் வேகத்தில் வேலை செய்ய... சில டிப்ஸ்

ரியல்மீ நிறுவனம் 'Airgap' மின்னழுத்த மின்மாற்றி என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வயர் இல்லாமல் போனை சார்ஜ் செய்கிறது. போனில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும், இந்த தொழில்நுட்பம் பேட்டரியை பாதுகாப்பாக வைத்திருக்கும். இது பேட்டரி சேதமடைவதைத் தடுப்பதோடு மிகக் குறைந்த அளவில் மின்சாரத்தை மட்டுமே வீணாக்குகிறது. 

வேகமாக சார்ஜ் செய்வதைத் தவிர, அழுத்தும் பட்டன் அல்லாமல் ஸ்லைட் ஆகும் பட்டனையும் Realme உருவாக்கியுள்ளது. இந்த பட்டன் மூலம் போனை எளிதாக ஜூம் செய்து உடனடியாக புகைப்படம் எடுக்கலாம். கண்கள் கூசாத வகையில் பிரகாசத்தை கொண்டிருக்கும் இதன் மூலம் உங்கள் போனை சிறந்த கேமிராவாக மாற்றலாம்.

மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் உங்கள் போனை சார்ஜ் செய்ய... சில டிப்ஸ் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News