ஐபோனை ஓரங்கட்ட வந்தது புது மொபைல்... அதிவேக சார்ஜிங், விலையும் கம்மி தான் - முழு விவரம் இதோ

Xiaomi 13T Pro: ஆப்பிள் ஐபோன் ஸ்மார்ட்போனுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் அதிரடி அம்சங்கள் நிறைந்த மொபலை Xiaomi நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 27, 2023, 02:48 PM IST
  • இதில் விரைவாக சார்ஜ்ங் செய்யப்படுகிறது.
  • இதன் விலை சுமார் ரூ. 70 ஆயிரம்.
  • கேமராவிலும் சிறந்த அனுபவத்தை பெறலாம்.
ஐபோனை ஓரங்கட்ட வந்தது புது மொபைல்... அதிவேக சார்ஜிங், விலையும் கம்மி தான் - முழு விவரம் இதோ title=

Xiaomi 13T Pro: Xiaomi நிறுவனம் அதன் Xiaomi 13T சீரிஸ் ஸ்மார்ட்போனை நேற்று (செப். 26) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த Xiaomi 13T சீரிஸில் இரண்டு மாடல்கள் உள்ளன. ஒன்று, Xiaomi 13T மற்றும் Xiaomi 13T Pro ஆகியவை அடங்கும். இரண்டு மாடல்களும் நல்ல மதிப்புமிக்க அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இந்த மொபைலில் மற்ற மாடல்களை விட அதிக வசதிகள் கிடைக்கின்றன.

Xiaomi 13T Pro மாடலானது, சீனாவில் கிடைக்கும் Redmi K60 Ultra மொபைலின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது. இது தவிர, இந்த மொபைலில் வேகமாக சார்ஜிங் கொண்ட வலுவான 5000mAh பேட்டரியும் உள்ளது. அந்த வகையில், அனைத்து வகையிலும் ஐபோனுக்கு நிகரான இந்த Xiaomi 13T Pro மொபைலின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

விவரக்குறிப்புகள்

Xiaomi 13T Pro மொபைலானது 1.5K ரிஸோல்யூஷன் (3,200 x 1,440 பிக்சல்கள்) மற்றும் 144Hz அடாப்டிவ் Refresh Rate உடன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்பிளே பிரகாசமாகவும் வண்ணமயமாகவும் உள்ளது. மேலும் இது வீடியோக்களைப் பார்ப்பதற்கும் கேம்களை விளையாடுவதற்கும் ஏற்ற வகையில் இருப்பதையும் காண முடிகிறது. 

மேலும் படிக்க | சாட்ஜிபிடி கூட இனி பேசலாம்... இமேஜ் போட்டாலும் பதில் கிடைக்கும்

பின்பக்க பேனலில் வளைந்த விளிம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது மொபைலின் அவுட்லுக்கை வேற லெவலுக்கு எடுத்துச் செல்கிறது. இது போன்ற வடிவமைப்பானது மொபைலை பாக்கெட்டில், கையில் வைத்திருக்கவும், அதனை பயன்படுத்தவும் எளிதாக்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் IP68-சான்றளிக்கப்பட்டது. அதாவது இது தூசி மற்றும் தண்ணீரை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் எந்த சூழ்நிலையிலும் உங்கள் போனை எந்த கவலையும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

அதிவேக சார்ஜிங் 

Xiaomi 13T Pro ஆனது சக்திவாய்ந்த MediaTek Dimensity 9200+ செயலி, 16GB RAM மற்றும் 1TB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது நீண்ட நேரம் வரை தாக்கு பிடிக்கும். இது 120W வேகமான சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது., எனவே நீங்கள் அதை விரைவாக சார்ஜ் செய்யலாம். இது MIUI 14 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 13இல் இயங்குகிறது மற்றும் நான்கு வருட OS புதுப்பிப்புகளையும் ஐந்து வருட பாதுகாப்பு இணைப்புகளையும் பெற தகுதியுடையது.

கேமராவின் சிறப்பு என்ன?

Xiaomi 13T Pro சிறந்த கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பிரதான கேமராவில் 50 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இந்த சென்சார் OIS மற்றும் EIS உடன் வருகிறது. டெலிஃபோட்டோ லென்ஸில் 50 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸில் 12 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இந்தத ஸ்மார்ட்போனில் 8K தரத்தில் வீடியோ எடுக்க முடியும். இது HD தரத்திலான வீடியோக்களை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது.

விலை என்ன தெரியுமா?

Xiaomi 13T Pro ஒரு சற்றே அதிகமான விலை ஸ்மார்ட்போன் ஆகும். இதன் ஆரம்ப விலை சுமார் ரூ. 70 ஆயிரமாக இருக்கும். இது 12 GB RAM + 256 GB இன்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அதிக சேமிப்பகத்துடன் கூடிய வகைகளின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஸ்மார்ட்போன் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. ஆல்பைன் ப்ளூ, புல்வெளி பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும்.

மேலும் படிக்க | கூகுள் ஆண்டவரின் 25ஆவது பிறந்தநாள்... பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News