Video பார்த்துக்கொண்டே Shopping: YouTube அறிமுகப்படுத்தும் அசத்தலான அம்சம்

கூடிய விரைவில் YouTube வீடியோக்களில் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளை பார்வையாளர்கள் வீடியோவில் பார்த்தவுடனேயே வாங்க முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2021, 11:41 AM IST
  • YouTube வீடியோக்களில் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளை இனி அங்கிருந்தே வாங்கலாம்.
  • இது குறித்த செயல்பாடுகளை நிறுவனம் துவக்கியுள்ளது.
  • குறிப்பிட்ட வீடியோக்களில் இந்த அம்சம் சோதிக்கப்படுகின்றது.
Video பார்த்துக்கொண்டே Shopping: YouTube அறிமுகப்படுத்தும் அசத்தலான அம்சம் title=

வீடியோக்களில் பார்க்கும் பொருட்களையும் தயாரிப்புகளையும் அந்த தளத்திலிருந்து நேரடியாக வாங்க பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை YouTube சோதித்து வருகிறது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட YouTube வீடியோக்களில் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளை பார்வையாளர்கள் வீடியோவில் பார்த்தவுடனேயே வாங்க முடியும்.

ஆண்ட்ராய்டு (Android), iOS மற்றும் இணையத்தில் அமெரிக்காவில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களிடையில் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் இந்த அம்சத்தை தற்போது சோதித்து வருகிறது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்கள், தங்கள் வீடியோக்களில் விற்பனைக்கு தயாராக உள்ள தயாரிப்புகளையும் பொருட்களையும் சேர்க்கலாம், அவை ஷாப்பிங் பேக் ஐகான் வழியாக பயனர்கள் வாங்குவதற்கு கிடைக்கும்.

கூகிள் (Google) ஆதரவு பக்கத்தில் புதிய அம்சம் சோதிக்கப்படுவது குறித்த விவரங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த அம்சம் பார்வையாளர்களுக்கு வீடியோக்களில் பார்க்கும் தயாரிப்புகளுக்கான பொருத்தமான தகவல்களையும் வாங்குவதற்கான விருப்பங்களையும் பெற அனுமதிக்கும் என்று YouTube கூறுகிறது. இந்த முன்முயற்சிக்காக நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களுடன் செயல்படுவதாக இத்தளம் கூறுகிறது.

சில வீடியோக்களின் கீழ் இடது மூலையில் தோன்றும் ஷாப்பிங் பேக் ஐகானைக் கிளிக் செய்து பார்வையாளர்கள் பிரத்யேக தயாரிப்புகளின் பட்டியலைக் காண முடியும். இங்கிருந்து, அவர்கள் ஒவ்வொரு தயாரிப்பின் பக்கத்தையும் ஆராயலாம். அங்கு அவர்கள் கூடுதல் தகவல்கள், தொடர்புடைய வீடியோக்கள் மற்றும் தயாரிப்பு வாங்குவதற்கான விருப்பங்களைக் காணலாம்.

ALSO READ: Itel Smartphone 7000 ரூபாய்க்கு கிடைக்குது தெரியுமா? விவரங்கள் உள்ளே…

கூகிள் ஷாப்பிங் விளம்பரங்களை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் பயனர்களுக்கு காட்டத் தொடங்கியது. ஒரு டிஜிட்டல் ஸ்டோர் ஃபிரண்டாவதற்கான முயற்சிகள் அப்போது எடுக்கப்பட்டன. விளம்பரங்கள் பயனர்கள் நேரடியாக வீடியோக்கள் வழியாக ஷாப்பிங் செய்ய அனுமதித்தன.

அக்டோபர் 2020 இல், வீடியோக்களில் இடம்பெறும் தயாரிப்புகளை டேக் மற்றும் டிராக் செய்ய YouTube மென்பொருளைப் பயன்படுத்துமாறு யூடியூப் படைப்பாளர்களைக் கேட்கத் தொடங்கியதாக ப்ளூம்பெர்க் அறிவித்தது. அறிக்கையின்படி, தரவு கூகிளின் ஷாப்பிங் கருவிகள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் இணைக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடியோ சேனல்களைக் கொண்டு தன் தளத்தில் அம்சங்களை சோதித்து வருவதாகவும், காண்பிக்கப்படும் தயாரிப்புகளின் மீது படைப்பாளர்களுக்கு கட்டுப்பாடு இருக்கும் என்றும் YouTube செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

YouTube-ன் சமீபத்திய சோதனை அதே யோசனையின் விரிவாக்கமாகத் தெரிகிறது. காலப்போக்கில் அதிகமான பயனர்களுக்கு இந்த அம்சத்தை YouTube வெளியிடும் சாத்தியம் உள்ளது.

ALSO READ: WhatsApp-ற்கு மாற்றான Threema. இதுக்கு நாங்க கியாரண்டி என்கின்றனர் தீவிரவாதிகள்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News