புதுடெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அருண் ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு துறை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக இன்று பொறுப்பேற்க உள்ளார். இதனால் மத்திய அமைச்சர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் 2-வது முறையாக பாதுகாப்பு துறையை கூடுதல் பொறுப்பாக அருண் ஜேட்லி ஏற்றுள்ளார்.
மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சட்ட விதிமுறைகளுக்கு இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் ஒப்புதல்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் ஜி.எஸ்.டி. சட்டத்தின் அனைத்து அம்சங்களும் பூர்த்திசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் நிதிபெறுவதில் வெளிப்படை தன்மையை அதிகரிக்க சில புதிய நடைமுறையை அமல் படுத்தப்பட உள்ளது.
ஒருவரிடம் ரூ. 2000 மட்டும் ரொக்கமாக பெற முடியும். இதற்கு முன் 20,000 ரூபாய் வரை ரொக்கமாக பெற அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அரசியல் கட்சிகள் செக் மூலமோ அல்லது மின்னனு முறையிலோ நன்கொடை நிதியை பெற்றுக்கொள்ளலாம். செக் மூலமோ அல்லது மின்னனு முறையிலோ நன்கொடை நிதியை பெறுபவர்களுக்கு கட்டுப்பாடில்லை.
அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தல் உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தல் உள்ளிட்ட சில சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் வங்கிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை ரூ. 2500 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோல தனி நபருக்கு ரூ. 4000 வரை பண மாற்றம் செய்யலாம் என்று இருந்ததையும் ரூ. 4500 உயர்த்தியுள்ளது. மத்திய நிதியமைச்சகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.