ஜெயலலிதா உடல்நிலையை மக்களிடம் மறைத்தது மக்களிடம் பொய் கூறியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்தான் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ உலக மாற்றுத் திறனாளிகள் (03.12.2017) நாளில் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன்."
இந்தியாவில் மாசுகளுக்கு 25 லட்சம் பேர் சாவு என்ன செய்யப் போகிறது அரசு என்றும் உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் மாசுகளுக்கு அதிக பேரை பலி கொடுக்கப்படுகிறது. என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இராஜிவ் கொலை வழக்கில் தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சாதாரணமான சிறை விடுப்பு ஓரிரு நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சிறைவிடுப்பை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாத நிலையில் இந்தக் கோரிக்கை நியாயமானதே.
மெர்சல் திரைப்படத்திற்குக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, அப்படத்தின் வசனத்தை நீக்கக்கோருவதையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கர்நாடக அரசு தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூருவில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்பட விளம்பரப் பதாகைகளைக் கிழித்ததோடு, கட் அவுட்டுகளை உடைத்து இருக்கின்றார்கள். திரை அரங்குகளில் படம் பார்த்துக் கொண்டு இருந்த தமிழர்களை விரட்டியடித்து வெளியேற்றி. திரைப்படத்தை ஓட விடாமல் கன்னட வெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்து வரும் நிலையில், அடுத்ததாக பன்றிக் காய்ச்சலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வழக்கம் போலவே, பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினால் மக்கள் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது.
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 15-ஆம் தேதி வரை 3244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் எனவே அரசு துங்கமால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது சமூக வலைத்தளத்தில் டாக்டர். அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
பொறையாறு பணிமனையில் ஏற்பட்டதை விபத்து என்று கூற முடியாது. திட்டமிட்ட படுகொலை என்று தான் கூற வேண்டும். ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் தான் இந்த விபத்துக்கு காரணம் ஆகும். பொறையாரில் இடிந்த கட்டிடங்களைப் போலத் தான் தமிழகத்தில் பெரும்பாலான அரசுக் கட்டிடங்கள் உள்ளன.
இத்தகைய விபத்துக்களைத் தடுக்கமால் 8 பேரை கொன்ற அரசை கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியாட்டுள்ளார்!
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மேதகு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தமது உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை வழங்காமல் ஏமாற்றக் கூடாது.
என்று தனது சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் ஊதிய விகிதம் குறித்த குறைகள் களையப்படவில்லை.
தேமுதிக சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் டெங்கு குறித்து விழிப்புணர்வு!
நாளை முதல் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதித்தவர்களுக்கு தேமுதிக சார்பில் உதவிகள் வழங்கப்படும். மேலும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்தில் சுனாமி, மழை, புயல், வெள்ளம் போன்ற எந்த ஒரு இயற்கை இடர்பாடுகள் வரும் போதெல்லாம், தேமுதிக களத்தில் இறங்கி மக்களுக்காக என்றைக்குமே உதவிசெய்யும்.
கருப்பு பணம் மதிப்பிழப்பு பிறகு டாஸ்மாக் நிறுவனம் மூலம் ரூ.800 கோடி பழைய ரூபாய் தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. இதை குறித்து மந்திரிகளை காக்க டாஸ்மாக் துடிப்பதா என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ் அவர்கள் தனது சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
ரூ.800 கோடி பழைய தாள்கள் மாற்றம்: மந்திரிகளை காக்க டாஸ்மாக் துடிப்பதா?
டெங்குவால் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துக் காட்டும் முயற்சியில் இல்லமால், வெறும் புள்ளி விபரங்களை அரசு மேற்கொள்ளமல் நோயை கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தனது சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ் அவர்கள் ஹஜ் புனிதப் பயண நடைமுறைகள் மாற்றமின்றி தொடர வேண்டும்! என்று தனது சமூக வலை தளம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இஸ்லாமியர்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹஜ் புனிதப் பயணம் தொடர்பான கொள்கையை மாற்றியமைக்கும்படி அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது.
அப்பரிந்துரைகளில் சில வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட பெரும்பாலானவை புனிதப் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. புனிதப்பயணத்துக்கு முட்டுக்கட்டைப் போடும் நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ் அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழகம் குறைக்க வேண்டும்! என்று தனது சமூக வலை தளம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.