காதலி நயன்தாராவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வந்த நானும் ரௌடி தான் படத்தை இயக்கினார். இப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இடையே காதல் ஏற்பட்டது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் நேற்று தனது 33-வது பிறந்தநாளை நியூயார்க்கில் கொண்டாடினார். அமெரிக்காவில் சுற்றுலா சென்றுள்ள இவர்கள் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.
விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு அமெரிக்காவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடியுள்ளார்.
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுடில் பரவி வருகிறது.
விக்னேஷ் சிவன் இன்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விக்னேஷ் சிவனுக்கு சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனது பிறந்தநாளை காதலி நயன்தாராவுடன் அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய உலகத் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139-ம் ஆண்டு பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பல தலைவர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது,
அவர் (பெரியார்) செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும். பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
இன்று தன்னுடைய பிறந்தநாள் கொண்டாடும் நடிகர்
ரமேஷ் அரவிந்து நடிகர், இயக்குனர், தயாரிப்பாளார் மற்றும் தொலைகாட்சி தொகுப்பாளர் பணிபுரிந்தவர். இவர் தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மாலையாளம் திரைப்படங்களில் பணிபுரிந்தவர்.
21-ம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களைக் கைக்குள் அடக்க ஆரம்பித்திருந்தார் யுவன் சங்கர் ராஜா. இவரை ரசிகர்கள் செல்லமாக U1 அழைப்பார்கள். பல இசையமைப்பாளர்கள் வந்தாலும் யுவனின் பாடல்கள் எப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.
இன்று யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். இதைதொடர்ந்து பிரபலங்களும் அவருக்கு டிவிட் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.
மேலும் இன்று யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு பலூன் பட குழுவினர் ரொமான்ஸ் பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
உலக அரங்கில், இந்தியா, ஹாக்கி போட்டியில் தனிச் சிறப்புடன் விளங்கியதற்கு தயான் சந்த் காரணம் ஆவார். இவர், கடந்த, 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார்.
ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் தனது தந்தையின் ஹாக்கி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அவரும் பயிற்சியில் ஈடுபட்டார்.
16-வயதில் தந்தை விளையாடிய ஹாக்கி அணி தோல்வியை தழுவ இருந்த நிலையில், களமிறங்கிய சந்த், நான்கு கோல்கள் அடித்து, அணியை வெற்றி பெற செய்தார்.
தனுஷ் இன்று தனது 34வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்.
தற்போது தனுஷ் மலேசியாவில் இருக்கிறார். அங்கு மலேசிய ரசிகர்கள் தனுஷிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனை தனுஷ், தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Was so overwhelmed by the love showered by fans in Malaysia .. was so touched when they sang happy birthday for me. Whatta birthday eve
— Dhanush (@dhanushkraja) July 27, 2017
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது.
சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அதிகாலை வெளியானது.
சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
தற்போதைய மாஸ் ஹீரோக்களில் அதிகளவில் ரசிகர் வட்டம் வைத்திருப்பவர் சூர்யா. இவர் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரசிகர்களுக்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக இவர் நடிக்கும் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சென்னை கோபலபுரத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியும் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனிடையே, திமுக தலைவருக்காக தான் எழுதிய பிறந்தநாள் கவிதையை தனது பேஸ்புக் பக்கத்தில் கனிமொழி வெளியிட்டு இருந்தார்.
pic.twitter.com/jCNbfXVtkX
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது இலத்தில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.
கருணாநிதி பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தார். இளம் வயது முதல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இன்று அவர் சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைரவிழா:-
தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா.
ஜூன் 2-ம் தேதி 1943-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மனைவி ஜீவா. இவருக்கு மூன்று பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் பவதாரிணி.
இவர் 1961-ம் வருடம் முதல், 1968-ம் ஆண்டு வரை சகோதர்களான பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோருடன் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தி வந்தார்கள்.
காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 78 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார்.
கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் பிறந்தார்.
'தல' அஜித் குமார் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தனது ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கும் அஜித் குமாருக்கு அனிருத், பிரேம்ஜி, விக்ரம் பிரபு, தனுஷ், ராகுல்தேவ், சிவகார்த்திகேயன், லட்சுமி மேனன், 'சிறுத்தை' சிவா, டி. இமான் போன்ற பல திரைத்துறைப் பிரபலங்கள், டிவிட்டரில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் இணைந்து நடித்து வரும் படம், 'தானா சேர்ந்த கூட்டம்'.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, செந்தில் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவரைத் தவிர ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பிராமையா, சத்யன், சுரேஷ் சந்திர மேனன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவுப் பணிகளை தினேஷ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும் கவனித்துவருகிறார்கள்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிம்புவுக்கு சமுக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என்று பன்முகம் கொண்ட சிம்பு இன்று தனது 34_வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
#HappyBirthdaySTR என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. சமிபத்தில் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து சிம்பு குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்களை பார்ப்போம்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.