விவாசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியுள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு என்ற பெயரில் ஜனவரி 26 ம் தேதி வன்முறைக்கு காரணமாக இருந்த மற்ற கலவரக்காரர்களையும் போலீசார் தற்போது அடையாளம் கண்டு வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி, அதன் மூலம் போராட்டங்கள் தூண்ட, இந்த கணக்குகள் வேலை செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்கள் அவையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை மீதான எம்.பிக்கள் கருத்துகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள்.
விவசாயிகள் போராட்டம் தொடர்ச்சியாக நீடிக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோரி வருகின்றனர்.
இன்று கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
நரேந்திர சிங் தோமர் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து பேசினார். விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
டெல்லியின் புறநகரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்வீட் செய்ததற்காக ஸ்வீடன் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வியாழக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. அதில சுமார் 400 காவல் துறையினர் காயம் அடைந்தனர். அதோடு மட்டுமல்லாமல், போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி தேசத்திற்கே அவமானத்தை தேடித் தந்தனர்.
மெய்நிகர் கூட்டத்தில் தலைவர்களுக்கிடையில் உரையாற்றிய பிரதமர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
தில்லி சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் மூண்டதை அடுத்து போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைகள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் மற்றும் ஆறு மூத்த பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.