இந்திய விமானப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், மிரேஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம், ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்துள்ளது!
ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிரான போரையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக விமானப்படை தளபதி தனோவா இன்று கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு அளித்த பேட்டி:-
தற்போதைய நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிரான போருக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. முழு அளவிலான போரை எதிர்கொள்ள நிறைய விமானப்படைகள் தேவைப்படுகிறது. இதனை வைத்து, போரை எதிர்கொள்ள முடியாது என கருதக்கூடாது.
வரும் 2032க்குள் இந்திய விமானப்படை 42 படைகளை பெறும். டோக்லாமில் சீன படைகள் முற்றிலும் திரும்ப பெறப்படவில்லை.
தெலுங்கானா கேசாராவில் இன்று(வியாழன்) இந்திய வானூர்தியின் (IAF) பயிற்சி விமானம் ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த விமானத்தில் பைலட் உள்பட மூன்று பேர் பயனித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள ஹக்கிம்பேட் பயிற்சி அகாடமியில் இருந்து விமானம் புறப்பட்டு, கேசிராவில் உள்ள பயிற்சி மையத்தி சென்றதாக தெரிகிரது.
கடந்த 23-ம் தேதி மாயமான சுகாய்-30 போர் விமானத்தின் பாகங்கள் சீன எல்லை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 23-ம் தேதி சுமார் 9.30 மணி அளவில் அசாம் மாநிலம் திஸ்பூரில் இருந்து 2 விமானிகளுடன் பயிற்சிக்கு புறப்பட்ட விமானம் 60 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது ரேடார் சிக்னலில் இருந்து மறைந்தது. இந்த விமானம் சீன எல்லைப் பகுதியில் மாயமானது.
விமானம் மாயமானதால் மிகுந்த பரபரபப்பு ஏற்பட்டது. மாயமான விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு காரணமாக என குறித்து விமானப்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
ஐஎஎப் சுஹோய் -30 போர் ஜெட் விமானம் 2 விமானிகளுடன் மாயமானதால், விமானத்தை தேடும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.
திஸ்பூரில் இருந்து 2 விமானிகளுடன் புறப்பட்ட விமானம் 60 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது ரேடார் சிக்னலில் இருந்து மறைந்தது.
சீன எல்லைப் பகுதியில் விமானம் மாயமானது.
இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலம் திஸ்பூரில் இருந்து வழக்கமான பயிற்சி பணிக்காக புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது என விமானப்படை தகவல்கள் தெரிவித்து உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.