ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிரான போரையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக விமானப்படை தளபதி தனோவா இன்று கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு அளித்த பேட்டி:-
தற்போதைய நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிரான போருக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. முழு அளவிலான போரை எதிர்கொள்ள நிறைய விமானப்படைகள் தேவைப்படுகிறது. இதனை வைத்து, போரை எதிர்கொள்ள முடியாது என கருதக்கூடாது.
வரும் 2032க்குள் இந்திய விமானப்படை 42 படைகளை பெறும். டோக்லாமில் சீன படைகள் முற்றிலும் திரும்ப பெறப்படவில்லை.
மேலும் பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணை திட்டங்கள் குறித்த கேள்வி எழுப்பிய போது கூறியது, எல்லையை தாண்டி, எந்த இலக்கையும் தேர்வு செய்து, நிர்ணயித்து துல்லியமாக தாக்கும் திறன் விமானப்படைக்கு உண்டு.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.