மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் கூறியுள்ளார்.
மோடி (Modi Govt) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (National Democratic Alliance) இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என என்.சி.பி கூறியுள்ளதாகத் தகவல்.
மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சி இடையே நடந்து வரும் உளவியல் இழுபறிக்கு மத்தியில், சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாரதீய ஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஒரு வியத்தகு திருப்பத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) சிவசேனாவுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதை சுட்டிகாட்டியுள்ளது.
ZEE NEWS இன் தேசியவாதத்தின் #IndiaKaDNA நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக கூட்டணி அரசு தான் அமையும்; ஃபட்னாவிஸ் முதல்வராக இருப்பார் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான 50-50 சூத்திரத்தில் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. மறுபுறத்தில் சிவசேனா ஆதரவு கோரினால், அதை காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் எனக் கூர்யு`கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனான கூட்டணி குறித்து திட்டவட்டமான பேச்சு எதுவும் இல்லாததால், சிவசேனா உதவியின்றி ஓரிரு நாட்களில் அரசாங்கத்தை அமைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தான் முதல்வராக இருப்பேன் என்று தேவேந்திர பத்னாவிசு கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி தொடர்பாக பாஜக-வுக்கும் சிவசேனா-வுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், பிரஹர் ஜனசக்தி கட்சியின் (PJP) இரண்டு MLA-க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
50-50 சூத்திரத்தில் காவி கட்சி ஒப்புக் கொண்டால்தான் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து தாங்கள் முடிவு செய்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள நிலையில், தனது கட்சித் தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் தாக்கரே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.