கௌண்டர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சரிடமிருந்து வந்துள்ள இந்த அறிக்கை, அமமுக மற்றும் சசிகலா குறித்த அதிமுக நிலைப்பாடு குறித்து மீண்டும் ஒரு முறை கலவையான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.
சசிகலாவின் அரசியல் காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. இன்று அதிகாலையிலேயே சென்னை ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்திற்க்கு சென்றார் சசிகலா. அங்கு மறைந்த் முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக கட்சியை உருவாக்கியவருமான எம்.ஜி.ராமசந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா.
தனது முதல் செய்தியாளர் கூட்டத்திலேயே, தான் யாருக்கும் அடக்கு முறைக்கு அடிபணியமாட்டேன், பொறுத்திருந்து பாருங்கள் போன்ற வசனங்கள் மூலம் தான் சும்மா இருக்க போவதில்லை என்பதை உணர்த்தியுள்ளார்.
மதுரையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் உண்மையின் பக்கம் இருப்பபர்களும் விஸ்வாஸத்தின் பக்கம் இருப்பவர்களும் சசிகலாவை ஆதரிக்கின்றனர் என்று தெரிவித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில், "கட்சி விரோத நடவடிக்கைகளில்" ஈடுபட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், சசிகலாவின் விடுதலை தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் சிறையில் உள்ள அவரது உறவினர் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனவே, இளவரசியும் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆருயிர்த் தோழி சசிகலா, தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியில் ஒரு பகுதியாக இருப்பார் என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி சமிக்ஞை கொடுக்கிறார்… திமுகவை தோற்கடிக்கும் நோக்கத்துடன் கூட்டணி ஒன்று சேரும்போது, அதிமுக-பாஜக கூட்டணி (AIADMK-BJP alliance) அனைத்து வித கோணங்களையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பார்கள் என்கிறார் குருமூர்த்தி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.