ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுதேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது!
இலவச திட்டங்கள் பலவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் தங்களுக்கென ஓர் இடத்தினை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறைவனம் தற்போது ரூ.500-க்கு Set-top பாக்ஸினை அறிமுகம் செய்யவுள்ளது!
இந்தியா மற்றும் சீனா சிக்கிம் எல்லையிலிருந்து நிலைநிறுத்தப்பட்டிருந்த தங்களது படைகளை திரும்பபெற முடிவு செய்துள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ட்விட்டரில் இதுகுறித்து "இந்திய சீன எல்லையிலிருந்து நிலைநிறுத்தப்பட்டிருந்த தங்களது படைகளை திரும்பபெற முடிவு செய்துள்ளது' என பதிவிட்டுள்ளார்.
"சமீபத்திய காலமாக இந்தியாவும் சீனாவும் டோக்லாம் சம்பவத்தில் சர்ச்சையான கருதுக்களை கடைபிடித்து வந்தன. இந்நிலையில் தற்போது அதற்கான சசுமுகமான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
டோக்லாம் பிரச்சனையை பூடானுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாகேலே தெரிவித்துள்ளார்.
டோக்லாம் விவகாரத்தில் மூன்று நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பரஸ்பரத்துடன் தீர்த்துக் கொள்ள இந்தியா ஈடுபட்டு உள்ளது. எனவே சீனாவுடனான பிரச்சனையில் பூடான் இணைந்து தீர்வைக் காண இந்தியா செயல்படுகிறது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாகேலே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நோக்கமானது அமைதி மட்டுமே. எனவே இருநாடுகளும் பிரச்சனையை அமைதியாக தீர்த்து கொள்ள தூதரக வழியாக செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், இரு நாட்டு படைகளும் சிக்கிம் எல்லை தங்கள் படைகளை குவித்து உள்ளது. இதனால், இந்திய மற்றும் சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் சிக்கிம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சீன ராணுவமும் ஏராளமான தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை குவித்துள்ளது.
1962-ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே நடந்த போருக்குப் பிறகு கடந்த 1 மாதமாக இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் அருகே சீன எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக, கூடுதல் படையினரை இந்தியா குவித்துள்ளது.
இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் சந்திக்கும் பகுதியானது டோகா லா. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது.
1962-ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே நடந்த போருக்குப் பிறகு கடந்த 1 மாதமாக இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் அருகே சீன எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக, கூடுதல் படையினரை இந்தியா குவித்துள்ளது.
இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் சந்திக்கும் பகுதியானது டோகா லா. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது.
சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் வரலாற்றில் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.