சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் நேற்று நிலம் வாங்க வந்தவர்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் வால் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை காண்பித்து மிரட்டி ஆறுமுகமிடம் ரூபாய் 23 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மே 28 அன்று நடத்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.
சிவகங்கை மாவட்ட ஜல்லிக்கட்டுக் குழுவினர் இந்தப் போட்டியை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டின் போது துரதிருஷ்ட வசமாக வாடிவாசலில் இருந்து ஓடி வந்த காளை பார்வையாளர் ஒருவரை முட்டியது. அதில் ஆலங்குடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் பிரபல ரவுடியை போலீசார் தூப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.
மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் நோக்கி கார்த்திகை சாமி தலைமையிலான ஆறுபேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் பங்கிலிருந்த பணத்தை பிடுங்கிச் சென்றனர்.
இதுதொடர்பாக பெட்ரோல் பங்கைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அப்போது அங்கு தொடர்பு கொண்ட வேல்முருகன் என்ற போலீசை தாக்கி அவர்கள் தப்பிச் சென்றார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.