நீருக்கடியில் 6 ரூபிக்ஸ் கியூப்-யை வெற்றிகரமாக சேர்த்த 18 வயது சிறுவன்!

நீருக்கடியில் ஒரே மூச்சில் 6 ரூபிக்ஸ் கியூப்-யை வெற்றிகரமாக முடித்த 18 வயது சிறுவன் கின்னஸ் சாதனையை உடைக்க முயற்சி...!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2018, 04:07 PM IST
நீருக்கடியில் 6 ரூபிக்ஸ் கியூப்-யை வெற்றிகரமாக சேர்த்த 18 வயது சிறுவன்!  title=

நீருக்கடியில் ஒரே மூச்சில் 6 ரூபிக்ஸ் கியூப்-யை வெற்றிகரமாக முடித்த 18 வயது சிறுவன் கின்னஸ் சாதனையை உடைக்க முயற்சி...!  

கடந்த வெள்ளிக்கிழமை 18 வயதுடைய ஜார்ஜியன் மாணவன் ஒரே மூச்சில் நீருக்கடியில் சுமார் 6 ரூபிக்ஸ் கியூப்-ஐ வெற்றிகரமாக முடித்து சாதனைபடைத்துள்ளார். வோகோ மார்க்கெலாஷாவில் நீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டியில் 18 வயதுடை சிறுவன் ஒரு நிமிடம் அல்லது 44 வினாடிகளில் சுமார் 6 ரூபிக்ஸ் கியூப்-பை அவர் முடித்துள்ளார்.

இதையடுத்து, ஜார்ஜியன் ரெகார்ட்ஸ் ஃபெடேசியுடனான அதிகாரி ஒருவர் இந்த விவரத்தை அறிந்து அவரது சாதனையை கண்டு வியது அவருக்கு பரிசளித்துள்ளார். பின்னர் இந்த சிறுவனின் சாதனை ஆவணங்களை கின்னஸ் சாதனை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து, அந்த சிறுவன் கூறுகையில்.... நான் இந்த முயற்சியை பல மாதங்களாக சித்து வருகிறேன். இது எனது கனவாகவும் இருந்தது. கின்னஸ் சாதனையை உடைக்கும் முயற்சியில் நான் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறேன். இன்னும் நான் பல சாதனைகளை செய்ய விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்..! 

 

Trending News