ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் ஆற்றிய உரையின் போது மயங்கி விழுந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தளத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாகவும், அபேவுக்கு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது காணப்பட்டதாகவும் ஒரு NHK நிருபர் குறிப்பிட்டுள்ளதாக ஜப்பானின் NHK வேர்ல்ட் நியூஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷின்சோ அபே உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுவதாக கூறப்படுகிறது, எனினும், இது குறித்த உறுதியான தகவல் இன்னும் தெரியவில்லை.
#UPDATE Former Japanese prime minister Shinzo Abe is feared dead after apparently being shot at a campaign event, local media report.
National broadcaster NHK says a man has been arrested for attempted murder and a gun confiscated
More details: https://t.co/MRMTYALVEj pic.twitter.com/suqYvW2vk6
— AFP News Agency (@AFP) July 8, 2022
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்தும்போது மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொது ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாகவும் இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் NHK தெரிவித்துள்ளது.
Former Prime Minister Shinzo Abe has been shot in the city of Nara, reports Japan's NHK. pic.twitter.com/pw4TyCdArl
— ANI (@ANI) July 8, 2022
முன்னாள் ஜப்பான் பிரதமர் சுயநினைவில் இல்லை என்றும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கியோடோ நியூஸ் கூறியது.
மேலும் படிக்க | பிரிட்டன் புதிய பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? இந்த மூவருக்கு வாய்ப்பு
நடந்தது என்ன?
மேற்கு ஜப்பானில் ஒரு தேர்தல் பிரச்சார நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஷின்சோ அபே மேடையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவர் மயங்கி விழுந்த அதே நொடியில் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கப்பட்டுள்ளது. ஷின்சோ அபே இரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் இந்த சம்பவம் குறிததும், ஷின்சோ அபேவின் உடல் நிலை குறித்தும் தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை. உள்ளூர் நேரப்படி பகம் சுமார் 11:30 மணி அளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிசோ அபே: ஜப்பானில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்
உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி 2020 இல் பதவி விலகுவதற்கு முன் அபே இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தார். ஆனால் அவர் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் (LDP) கட்சியின் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருந்து அவர் அதன் முக்கிய பிரிவுகளை கட்டுக்குள் வைத்திருந்தார்.
மேலும் படிக்க | அடுத்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமராக இவர் பதவி ஏற்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR