பெய்ஜிங்: பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று நம் நாட்டில் கூச்சல் எழுப்புபவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் சற்று அண்டை நாடுகளை திரும்பிப் பார்த்தால்தான் புரியும் இந்தியாவில் அனைத்திற்கும் எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்று. இங்கு நினைத்ததை பேசுகிறோம். ஆளும் தலைவர்களை எள்ளி நகையாடுகிறோம், வில்லன்களாய் விமர்சிக்கிறோம், கேலிப் பேச்சுகளை அள்ளி வீசுகிறோம்… இன்னும் என்னென்னவோ செய்கிறோம். இப்படி எல்லாம் சில நாடுகளில் செய்தால், செய்த நபர் ஒன்று காணாமல் போயிருப்பார், அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.
இதற்கு பல உதாரணங்களைக் காட்ட முடியும். சமீபத்தில் நம் அண்டை நாடான சீனாவில் நடந்த ஒரு சம்பவம் இதற்கான ஒரு உதாரணமாகியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை (Xi Jinping) ஒரு 'கோமாளி' என்று குறிப்பிட்ட சீன தொழிலதிபர் ரென் ஷிகியாங் (Ren Zhiqiang), ஊழல், லஞ்சம் மற்றும் பொது நிதி மோசடி தொடர்பாக 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கீழ் கொரோனா வைரஸ் தொற்றுநோயை சீனா (China) கையாண்ட விதம் குறித்து ரென் ஒரு கட்டுரையில் விமர்சித்திருந்தார். பின்னர் அவர் மர்மமான முறையில் மார்ச் மாதம் காணாமல் போனார்.
69 வயதான ரென், அரசுக்கு சொந்தமான ஹுவாயுவானின் முன்னாள் தலைவராக இருந்தார். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் (Chinese Communist Party) உள் வட்டத்தில் இருப்பதாக அவர் கருதப்பட்டார். பொது நிதியில் 7.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு 620,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ALSO READ: வட கொரியாவா வினோத கொரியாவா: Kim Jong Un ஆட்சியின் latest order என்ன தெரியுமா?
“ரென் தன்னுடைய அனைத்து குற்றங்களையும் தானாக முன்வந்து உண்மையாக ஒப்புக்கொண்டார்" என்று சீன அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஹுவாயுவானில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவருக்கு எதிரான தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"இந்த தொற்றுநோய், கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை செலுத்துகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் உயர் நிலையில் இருக்கும் தலைவர்கள் தங்கள் நலன்களையும் முக்கிய நிலைப்பாட்டையும் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள்" என்று ரென் விமர்சித்திருந்தார்.
"அங்கு நிற்பது தன் புதிய ஆடைகளை காட்டும் ஒரு அரசாளர் அல்ல, அரசராக இருந்தாலும், உடைகள் பறிக்கப்பட்ட ஒரு கோமாளி அவர்” என்று ரென் மேலும் கூறியிருந்தார்.
ரென் முன்னர் பத்திரிகை சுதந்திரத்திற்காக குரல் கொடுத்திருந்தார். எனினும், இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரது Weibo அகௌண்டை மூடினர்.
ALSO READ: வட கொரியாவில் கண்ணாமூச்சி ரே ரே Part 2: கிம்மின் சகோதரி எங்கே?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR