இஸ்ரேலின் பீட் ஷீஅரிமில் உள்ள பாரம்பரிய தொல்லியல் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை ஒன்றில் திறக்காதே என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 65 ஆண்டுகளுக்கு பிறகு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்லறை இதுவாகும்.
பயங்கர எச்சரிக்கையுடன் கூடிய கல்லறை என்பது திகில் திரைப்பட ரசிகர்களுக்கு புதிதல்ல. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கல்லறையைக் கண்டுபிடித்ததால், திறக்காதே, நான் சபிக்கப்பட்ட கல்லறை என்ற சிவப்பு நிற எச்சரிக்கை கொஞ்சம் திகைப்பைத் தரும்.
இஸ்ரேலில் (Isreal) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சரிக்கை தாங்கிய முதல் கல்லறை இதுவாகும். ஏறக்குறைய ஒரு வருடமாக அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன, இது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு முதல் பெரிய திருப்புமுனையாகும்.
மேலும் படிக்க | ட்விட்டர் ஊழியர்களுடன் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தும் எலான் மஸ்க்
கல்லறையை திறக்க முயற்சிப்பவர்களுக்கு சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை எழுதப்பட்டிருந்தது. கல்லறையில் எழுதப்பட்டிருந்தஉரையை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள், அந்த எச்சரிக்கையில் கூறியது - “இந்த கல்லறையைத் திறக்கும் எவரையும் சபிப்பதாக யாகோவ் ஹாகர் எச்சரித்திருக்கிறார், யாரும் இந்த கல்லறையைத் திறக்கக்கூடாது என்பதற்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கல்லறைக் கொள்ளையர்கள் அல்லது இந்த இடங்களுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்கும் நபர்களுக்காக இருந்தாலும், மற்றவர்கள் கல்லறையை மீண்டும் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் (Archaeologist) தெரிவித்தனர்.
Things you shouldn't open:
- Pandora's Box
- An umbrella indoors
- Ancient gravesAn 1,800 year old grave marker for a Jewish man named Jacob the Convert was recently discovered in the Galilee. The marker included an inscription warning people against opening the grave. pic.twitter.com/9JHyBBH3aI
— Israel ישראל (@Israel) June 8, 2022
"இந்த எச்சரிக்கைக்கான காரணம், கல்லறையை மற்றவர்கள் திறப்பதைத் தடுப்பதாகும், ஏனென்றால், கல்லறையிலுள்ள விலையுயர்ந்தப் பொருட்களை திருடுவது அடிக்கடி நிகழ்ந்தது. அதுமட்டுமல்ல, காலப்போக்கில் கல்லறைகளை மீண்டும் பயன்படுத்துவதையும் தடுக்கும் நோக்கில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம்" என்று கல்லறையை ஆய்வு செய்பவர்களில் ஒருவரான ஆதி எர்லிச் கூறினார்.
"இந்தக் கல்வெட்டு ரோமானிய காலத்தின் பிற்பகுதியில் அல்லது ஆரம்பகால பைசண்டைன் காலத்தைச் சேர்ந்தது, இதில் கிறித்துவம் வலுப்பெற்றது. மேலும் யூத மக்களுடன் சேரத் தேர்ந்தெடுக்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை இங்கே காண்கிறோம். ரோமானிய காலத்தில் பெரும்பாலும் இறுதிச் சடங்குகளில் இருந்து மதம் மாறியவர்களை நாங்கள் அறிவோம். கி.பி முதல் நூற்றாண்டு ஜெருசலேம், அல்லது கி.பி மூன்றாம் முதல் நான்காம் நூற்றாண்டு ரோம் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம்..ஆனால் பெய்ட் ஷியாரிமின் முதல் மதம் மாறியவர், எனவே, இது உண்மையான செய்தி".
"நாங்கள் கல்வெட்டைக் கவனித்து, குகையை தற்போதைக்கு பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகத் தடுப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம். தற்போது இங்கு எந்த அகழ்வாராய்ச்சியும் மேற்கொள்ள திட்டமிடப்படவில்லை," என்று ஆதி எர்லிச் கூறினார்.
மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR