சர்வதேச பிரபல நிறுவனமான டெஸ்லா ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பான செய்தியை எலோன் மஸ்க் உறுதி படுத்தினார். ஆனால் தற்காலிகமாக பணியமர்த்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடரும் என்று மஸ்க் கூறுகிறார்.
இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள எலான் மஸ்க், டெஸ்லா ஊழியர்களை எச்சரிக்கும் விதமாக அவர் சொல்வது வைரலாகிறது. 'அலுவலகத்தில் இருந்து வேலை செய்யுங்கள் அல்லது வெளியேறி விடுங்கள்' என்று எச்சரிக்கை பல ஊழியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
டெஸ்லா தனது ஊழியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்கும் என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். மூன்று மாத காலத்திற்குள் தொழிலாளர்களில் 10 சதவிகிதம் குறைக்கும் என்று நிறுவனத்தின் தலைவரும் பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் மஸ்க் கூறினார்.
10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஊழியர்களுக்கு மஸ்க் எழுதிய கடிதத்தை ஒரு அறிக்கை மேற்கோள் காட்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த விஷயம் வெளிப்படையாக வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க | 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.54,50,67,53,50,000 இழந்தார் எலோன் மஸ்க்
டெஸ்லா மக்கள் எண்ணிக்கையை குறைப்பதுடன் நிற்கப்போவதில்லை என்று ப்ளூம்பெர்க் ஏற்பாடு செய்த கத்தார் பொருளாதார மன்றத்தின் போது எலோன் மஸ்க் தெரிவித்தார்.
அடுத்த மூன்று மாதங்களில் நிறுவனத்தின் 10 சதவிகிதத்தினர் குறைக்கப்படுவார்கள் என்று கூறிய மஸ்க், உலகப் பொருளாதார மந்தநிலையைக் கையாள்வதற்கான நிறுவனத்தின் வழி இதுதான் என்று தெரிவித்தார்.
10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றாலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 3.5 சதவீதம் மட்டுமே குறையும் என்று எலோன் மஸ்க் சுட்டிக்காட்டினார்.
நிரந்தர சம்பளம் பெறும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அதே வேளையில், தற்காலிகமாக பணியமர்த்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று மஸ்க் தெளிவுபடுத்தினார்.
மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்
நிறுவனத்தின் தலைவர்களின் எண்ணிக்கை தற்போதைய அளவை விட ஒரு வருடத்திற்குள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார் மஸ்க்.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், டெஸ்லா மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை 1,00,000 ஆக உயர்த்தியது என்பதும்,கடந்த ஆண்டு, டெஸ்லா அதன் பணியாளர்கள் எண்ணிக்கையிஐ கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் வேலைக்கு செய்யும் முறையை ஆதரிக்கும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், பணியாளர்கள் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால், அவர்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க | இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம்
"தெளிவாக இருக்க," என்ற தலைப்பில் அவர் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "டெஸ்லாவில் உள்ள ஒவ்வொருவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணிநேரம் அலுவலகத்தில் செலவிட வேண்டும்...மேலும், அலுவலகம் உங்கள் உண்மையான சக ஊழியர்கள் இருக்கும் இடமாக இருக்க வேண்டும், தொலைதூரத்தில் இருக்கக்கூடாது. நீங்கள் வரவில்லை என்றால், நீங்கள் ராஜினாமா செய்துவிட்டீர்கள் என்று கருதுவோம்: என்று தெரிவித்துள்ளார்.
போதிய அறிவிப்பு இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டதற்காக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் மீது இரண்டு ஊழியர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெருமளவிலான பணிநீக்கங்கள் தொடங்கிவிட்டதாகவும், அது அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாகவும் ஊழியர்கள் கூறியுள்ள நிலையில், நிறுவனத்தின் பத்து சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தற்போதைய சர்வதேச பொருளாதார மந்தநிலையில் அவசியமானது என்று மஸ்க் கருதுகிறார்.
மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR