எதிர்கட்சி தலைவராக ராஜபக்ச; நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி!

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ராஜபக்ச பெயர் அறவிக்கப்பட்டதற்கு அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!

Last Updated : Dec 18, 2018, 03:22 PM IST
எதிர்கட்சி தலைவராக ராஜபக்ச; நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! title=

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ராஜபக்ச பெயர் அறவிக்கப்பட்டதற்கு அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!

இலங்கையில் 52 நாட்கள் நடந்த அரசியல் நெருக்கடி முடிவுகட்டும் விதமாக கடந்த டிசம்பர் 16-ஆம் நாள் மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் ரணில் விக்ரமசிங்கே.

இதனையடுத்து அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி., நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு அளித்துள்ளது.

அதேவேலையில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்தராஜ பக்சவும், எதிர்க்கட்சி அமைப்பாளராக மஹிந்த அரவீரவும் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால், மஹிந்த தரப்பினர் சுதந்திரக் கட்சி அங்கத்திலிருந்து நீங்கியதால் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கக் கூடாது என அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Trending News