ஆப்கான் அரசியலில் பரபரப்பு; காபூல் திரும்பினார் முல்லா அப்துல் கானி பராதர்..!!

ஆப்கானிஸ்தான் புதிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தாலிபான் தலைவரும் துணை பிரதமருமான முல்லா அப்துல் கனி பராதர், சில நாட்களுக்கு இறந்து விட்டார் என்ற வதந்தி பரவியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 6, 2021, 04:32 PM IST
  • பராதர் 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 2018 ஆம் ஆண்டு விடுதலையான பிறகு, அவர் தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்திற்கு தலைமை தாங்கினார்.
  • அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தையில் மிக முக்கியமான நபராக இருந்தார்.
ஆப்கான் அரசியலில் பரபரப்பு; காபூல் திரும்பினார் முல்லா அப்துல் கானி பராதர்..!! title=

காபூல்: ஆப்கானிஸ்தான் புதிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தாலிபான் தலைவரும் துணை பிரதமருமான முல்லா அப்துல் கனி பராதர், சில நாட்களுக்கு இறந்து விட்டார் என்ற வதந்தி பரவியது. அதிகார போட்டியில், நடந்த மோதலில் அவர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியானது. 

இந்நிலையில் அவர் தற்போது, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குத் திரும்பியுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், அவர் தன்னுடைய தனிப்பட்ட பாதுகாப்புப் படையினருடன் காபூல் வந்துள்ளார். ஹக்கானி நெட்வொர்க்கின் சிராஜுதீன் ஹக்கானி தலைமையிலான உள்துறை அமைச்சகத்த்தின் பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என தலிபான் (Taliban) தலைவர் முல்லா அப்துல் கானி பராதர் (Mullah Abdul Ghani Baradar) மறுத்துவிட்டார்.

காபூலில் ஹக்கானி பிரிவுடன் சமீபத்தில் நடந்த சண்டையில் பராதர் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது மரணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு மத்தியில், தலிபான்கள் பராதர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்த அவர் பேசியதாக ஆடியோ அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால், வீடியோ வெளியிடாததால், அவர் இறந்து விடாரோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது

ALSO READ |‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்

தலிபான் நிறுவனர் முல்லா உமரின் மகன் முல்லா யாகூப் இன்னும் காந்தஹாரில் இருக்கிறார். பரதர் காபூலுக்குத் திரும்புவது தலைநகரில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்று அந்த அறிக்கைகள் மேலும் தெரிவித்தன. தலிபான்களுக்கும் ஐஎஸ்ஐ ஆதரவு ஹக்கானி நெட்வொர்க்குக்கும் இடையிலான மோதல் வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்

முல்லா அப்துல் கானி பராதர் ஒருகாலத்தில் தாலிபானின் தனித்தலைவர் முல்லா முகமது உமரின் நெருங்கிய நண்பராக இருந்தார், அப்போது அவர் அவருக்கு "பராதர்" அல்லது "சகோதரர்" என்று பெயரிட்டார். தாலிபான்கள் கடைசியாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது அவர் துணை பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.

முன்னதாக தாலிபான் அரசு வீழ்த்தப்பட்ட போது, கூட்டணிப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பான ஒரு மூத்த இராணுவத் தளபதியாக பராதர் பணியாற்றினார். பராதர் 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு விடுதலையான பிறகு, அவர் தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்திற்கு தலைமை தாங்கினார், அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தையில் மிக முக்கியமான நபராக இருந்தார். 

ALSO READ | Afghanistan: ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான்; காரணம் என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News