மாஸ்கோ: இன்று அதிகாலையில் மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறைந்தது எட்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் "பயங்கரவாத தாக்குதலை" நடத்தியதாகவும், இந்தத் தாக்குதல்களில் மாஸ்கோவில் பல கட்டிடங்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உலக மக்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யா - உக்ரைன் யுத்தம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இரு தரப்பிலும் ஒரு சாமதானத்திற்கு வராத நிலையில், போரின் நேரடி மற்றும் பக்க விளைவுகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இன்றைய தாக்குதலில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்று தலைநகர மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். அவசர சேவைகள் "சம்பவங்கள் நடந்த இடத்தில்" இருப்பதாக அவர் கூறினார். அனைத்து ட்ரோன்களும் இடைமறிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
#BREAKING Moscow suffers 'minor' damage from drone attack, no casualties: mayor pic.twitter.com/F7afQM6OzU
— AFP News Agency (@AFP) May 30, 2023
"அவற்றில் மூன்று மின்னணுப் போரால் அடக்கப்பட்டன, கட்டுப்பாட்டை இழந்தன மற்றும் அவற்றின் இலக்குகளிலிருந்து விலகிச் சென்றன. மேலும் ஐந்து ட்ரோன்கள் மாஸ்கோ பிராந்தியத்தில் Pantsir-S மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணை அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று ரஷ்ய அமைச்சகம் கூறியது.\
மேலும் படிக்க | ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரத்தை அமைக்க உள்ள இந்தியா!
முன்னதாக, 30 ஆளில்லா விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. அவற்றில் பல கட்டிடங்கள் மீது விழுந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைன் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், உக்ரைனின் இராணுவ உளவுத்துறையின் தலைவர் ஜெனரல் கைரிலோ புடானோவ், கியேவ் மீதான தொடர்ச்சியான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதை உலகம் பார்க்க வேண்டும்.எந்தவொரு ரஷ்ய ஏவுகணைகளையும் நூறு சதவீதம் வீழ்த்துவதை உறுதிசெய்யும்போது, பயங்கரவாதம் வலுவிழக்கிறது. பொருளாதாரத் தடைகள் உட்பட ரஷ்யா மீதான அழுத்தங்களை உலக நாடுகள் அதிகரிக்கும் போது, பயங்கரவாதிகளின் தனிமை அதிகரிக்கும் போது அவர்கள் அடங்குவார்கள் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
The world needs to see that terror is losing. When Patriots in the hands of Ukrainians ensure one hundred percent downing of any Russian missiles, terror is losing. When the world increases pressure on Russia, including sanctions, when the terrorist's isolation grows, when its… pic.twitter.com/KyPmzoxsPF
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 29, 2023
மாஸ்கோவில் உள்ள பல கட்டிடங்கள் ட்ரோன்களால் தாக்கப்பட்டன, அதே நேரத்தில் ரஷ்ய தலைநகரை நெருங்கும் போது பல ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்தன, மாஸ்கோவில் உள்ள பல கட்டிடங்கள் ட்ரோன்களால் தாக்கப்பட்டதில் "சிறிய" சேதம் மட்டுமே ஏற்பட்டதாக ரஷ்ய தரப்பு கூறுகிறது.
மேலும் படிக்க | வைஷ்ணவ் தேவி கோவிலுக்கு சென்ற பேருந்து விபத்து உயிரிழப்பு! ரூ.2 லட்சம் இழப்பீடு
இன்று (2023 மே 30 செவ்வாய்) காலை, ரஷ்ய தலைநகரை டிரோன்கள் நெருங்கும் போது வான் பாதுகாப்பு அமைப்புகளும் பல ட்ரோன்களை அழித்ததாக செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தனது டெலிகிராம் சேனலில் பதிவிட்டுள்ள மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், "நகரத்தின் அனைத்து அவசர சேவைகளும் சம்பவங்கள் நடந்த இடத்தில் உள்ளன" என்று கூறினார். மாஸ்கோ பிராந்தியத்தின் கவர்னர் ஆண்ட்ரே வோரோபியோவ், மாஸ்கோவை நெருங்கியபோது பல ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாகக் கூறினார்.
ரஷ்யாவின் பல டெலிகிராம் செய்தி சேனல்கள் நான்கு முதல் 10 ட்ரோன்கள் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியிலும் அதன் உடனடிப் பகுதியிலும் வீழ்த்தப்பட்டதாகக் கூறின. சில குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதாக சோபியானின் கூறினார்.
நகரின் இராணுவ நிர்வாகம் கூறியது போல், ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்களைக் கொண்டு மட்டுமே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | விண்வெளிக்கு சிவில் வின்ஞானியை அனுப்பியது சீனா! Shenzhou-16 லிஃப்ட்ஆஃப் வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ