நேபாள மின்சார உற்பத்தி நிலையத்தில் குண்டுவெடிப்பு!

பிரதமர் மோடி திறந்து வைக்கவிருந்த நேபாள மின்சார உற்பத்தி நிலைய அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

Last Updated : Apr 29, 2018, 07:28 PM IST
நேபாள மின்சார உற்பத்தி நிலையத்தில் குண்டுவெடிப்பு!  title=

பிரதமர் மோடி திறந்து வைக்கவிருந்த நேபாள மின்சார உற்பத்தி நிலைய அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

நேபாளத்தில் தும்லிங்டார் பகுதியில் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்மின் திட்டத்தை அமைக்க மத்திய அரசு நிதி உதவியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி நேபாளம் சென்ற பிரதமர் மோடி மற்றும் அப்பொழுது அங்கு பிரதமராக இருந்த சுஷில் கொய்ராலா முன்னிலையில் திட்ட வளர்ச்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

2020-ம் ஆண்டில் முழுவதுமாக செயல்பட திட்டமிடப்பட்டிருககும் இதன் அலுவலகத்தினை பிரதமர் மோடி வரும் மே மாதம் 11-ம் தேதி திறந்து வைக்க இருக்கிறார். 

இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நிலைய அலுவலகத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுவர் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்த்தி வருகின்றனர். இதுவரை இந்தக் குண்டுவெடிப்புக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இது போலவே நேபாளத்தில் கடந்த 17-ம் தேதி பீரட்நகரில் அமைந்துள்ள இந்திய தூதரக அலுவலகம் அருகே குக்கர் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் அதன் சுவர்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது! 

Trending News