லாக்கரில் எதை வைக்கலாம்... எதை வைக்கக்கூடாது... தொலைந்தால் யார் பொறுப்பு... விதிகள் கூறுவது என்ன!

லாக்கரில் வைத்த பொருட்கள் திருடு போவது மற்றும் லாக்கரில் வைத்த ரூபாய் நோட்டுக்கள் ஆவணம் சேதம் போன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு வங்கி என்ன உத்தரவாதம் அளிக்கிறது என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 9, 2023, 01:59 PM IST
  • ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 2022 ம் ஆண்டு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை.
  • ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்.
  • வங்கிகள் காலி லாக்கர்களின் பட்டியல் மற்றும் காத்திருப்புப் பட்டியலைக் காட்ட வேண்டும்.
லாக்கரில் எதை வைக்கலாம்... எதை வைக்கக்கூடாது... தொலைந்தால் யார் பொறுப்பு... விதிகள் கூறுவது என்ன! title=

வங்கி லாக்கர் விதிகள்: மக்கள் மதிப்புமிக்க பொருட்களை, குறிப்பாக நகைகளை, வங்கி லாக்கர்களில் வைக்கின்றனர், ஏனெனில் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன. ஆனால் வங்கி லாக்கர்கள் உண்மையில் பாதுகாப்பானதா? சமீப காலமாக லாக்கரில் வைத்த பொருட்கள் திருடு போவது மற்றும் லாக்கரில் வைத்த ரூபாய் நோட்டுக்கள் ஆவணம் சேதம் போன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு வங்கி என்ன உத்தரவாதம் அளிக்கிறது என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்கி லாக்கரின் விதிகளை சொல்லும் முன் சில சம்பவங்களை சொல்கிறோம். கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை கரையான்கள் தின்றுவிட்டன. இதையடுத்து அந்த பெண் வாடிக்கையாளர் கிளை மேலாளரிடம் புகார் அளித்தார். கணக்கு வைத்திருப்பவர் அல்கா பதக் கூறுகையில்,  லாக்கரில் பணத்தை வைக்க கூடாது என்பது குறித்து தனக்கு தெரியாது. எனவே, வங்கி லாக்கரில் நகைகளுடன் ரூ.18 லட்சத்தை வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி லாக்கர் தொடர்பான மற்றொரு வழக்கு, அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு கூட்டுறவு வங்கியின் லாக்கரை அடைந்த திருடர்கள், 32 வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இழப்பு குறித்த முழுமையான மதிப்பீடு இன்னும் செய்யப்படவில்லை. 

இந்நிலையில், இங்கே தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வங்கி லாக்கரில் (Bank Locker) வைத்திருந்த பணத்தைத் கரையான்கள் தின்ற நிலையில், வங்கி இழப்பீடு தருமா? அல்லது அம்பலாவில் உள்ள வங்கி ஒன்றில் திருடன் 32 லாக்கர்களை உடைத்து அதில் வைத்திருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்ட நிலையில், வங்கி பொறுப்பேற்று வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் முழுவதும் திரும்பக் கிடைக்குமா? இன்று இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை வழங்க முயற்சிப்போம். வங்கி லாக்கரைப் பற்றி ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் என்ன, வங்கி லாக்கரில் எதை வைத்துக்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 2022 ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது வங்கி லாக்கர்கள் தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டது. இந்த விதியின் கீழ், ஜனவரி 1, 2023க்குள் ஏற்கனவே உள்ள லாக்கர் வைத்திருப்பவர்களுடனான ஒப்பந்தங்களை வங்கிகள் திருத்த வேண்டும். இந்த விதிகள் பழைய லாக்கர் வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும். இந்த விதிகள் ஜனவரி 2022 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதுள்ள லாக்கர் வாடிக்கையாளர்களுடன் வங்கிகள் ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இப்போது புதிய விதியின் கீழ் வங்கி லாக்கரில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

புதிய விதி என்ன? (வங்கி லாக்கர் விதி)

புதிய விதிகளின்படி, வங்கிகள் காலி லாக்கர்களின் பட்டியல் மற்றும் காத்திருப்புப் பட்டியலைக் காட்ட வேண்டும். இது தவிர, வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரே நேரத்தில் லாக்கர்களுக்கான வாடகையை வசூலிக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வாடிக்கையாளருக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், நிபந்தனைகளை மேற்கோள் காட்டி வங்கியால் பின்வாங்க முடியாது, மாறாக வாடிக்கையாளருக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படும்.

மேலும் படிக்க | Cyber Alert: பாகிஸ்தானின் சைபர் கிரைம் யுத்தம்! இந்த 3 செயலிகளை பயன்படுத்த வேண்டாம்!

வங்கிகள் பொறுப்புகளில் இருந்து தப்ப முடியாது

ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட விதிகளின்படி, வங்கிகள் தாங்கள் செய்துள்ள லாக்கர் ஒப்பந்தத்தில், வாடிக்கையாளர் நஷ்டம் அடைந்தால் வங்கி எளிதில் பொறுப்பை தட்டிக் கழிக்கும் வகையில், நியாயமற்ற வகையிலான நிபந்தனைகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.  ஏனெனில் பல நேரங்களில் வங்கிகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை காரணம் காட்டி தங்கள் பொறுப்புகளை தட்டிக்கழிக்கின்றன.

ரிசர்வ் வங்கி விதியின்படி, வங்கியின் அலட்சியத்தால் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் பணம் செலுத்த வங்கிகளுக்கு பொறுப்பு உண்டு. லாக்கர்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது வங்கிகளின் பொறுப்பு. தீ, திருட்டு/கொள்ளை, வங்கி வளாகத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து பாதிப்பு போன்று, வங்கி தரப்பில் பாதுகாப்பு குறைபாடுகள், அலட்சியம் மற்றும் ஏதேனும் தவறுகள் காரணமாக இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது வங்கியின் பொறுப்பாகும்.

வங்கி லாக்கரில் வைக்க கூடிய பொருட்கள்

வங்கி லாக்கரின் புதிய விதிகளின்படி, வங்கியும் வாடிக்கையாளர்களும் புதிய ஒப்பந்தத்தில் என்ன வகையான பொருட்களை வைக்கலாம், எந்த வகையான பொருட்களை வைக்கக்கூடாது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கி லாக்கரில் வாடிக்கையாளர்கள் நகைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் பொருட்களை மட்டுமே வைத்திருக்க முடியும். வங்கி லாக்கரை வாடிக்கையாளர் மட்டுமே அணுக முடியும், அதாவது, லாக்கரைத் திறக்கும் வசதி குடும்ப உறுப்பினர்கள் அல்லது வேறு யாருக்கும் கிடைக்காது.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் இருந்து தற்போது வாடிக்கையாளர்கள் ஓரளவுக்கு நிவாரணம் பெறுவார்கள். லாக்கரால் ஏற்படும் இழப்புகளுக்கு வங்கிகளே பொறுப்பாகும். ஆனால் நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் லாக்கரின் உள்ளடக்கங்கள் சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் வங்கி எந்தப் பொறுப்பையும் ஏற்காது. அதாவது முழு இழப்பையும் வாடிக்கையாளர் ஏற்க வேண்டும்.

இருப்பினும், தீ, திருட்டு, கொள்ளை, கட்டிடம் இடிந்து விழுதல் போன்றவற்றின் போது, ​​லாக்கர் வாடிக்கையாளருக்கு ஏதேனும் நிதி இழப்பு ஏற்பட்டால், அதை வங்கி ஏற்கும், ஏனெனில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க வங்கியால் முடியும். ஆனால் இங்கும் இழப்பீடு தொடர்பாக நிபந்தனை உள்ளது. வங்கிகளின் பொறுப்பு லாக்கரின் வருடாந்திர வாடகையை விட 100 மடங்கு வரை மட்டுமே இருக்கும், எனவே ஆண்டு வாடகையை விட 100 மடங்கு மதிப்புள்ள பொருட்களை லாக்கரில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | Online Scam: வங்கியில் பழைய போன் நம்பரை கொடுத்திருக்கிறீர்களா... உடனே அதை மாற்றுங்கள்!

உதாரணமாக, லாக்கரின் ஆண்டு வாடகை ரூ.1000 என்றால், லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் காணாமல் போனால், வாடிக்கையாளருக்கு 100 மடங்கு வாடகை அதாவது ரூ.1 லட்சம் மட்டுமே இழப்பீடாக கிடைக்கும்.

வங்கி லாக்கரில் எதை வைக்க முடியாது?

வங்கி லாக்கரில் ஆயுதங்கள், பணம் அல்லது வெளிநாட்டு நாணயம் அல்லது மருந்துகள் அல்லது கொடிய நச்சுப் பொருட்களை வைக்க முடியாது. லாக்கரில் பணத்தை வைத்திருந்தால், அது விதிகளுக்கு முரணானது மற்றும் எந்த இழப்புக்கும் வங்கி பொறுப்பேற்காது. ஒரு ரூபாய் கூட இழப்பீடு கிடைக்காது. வங்கி லாக்கரின் கடவுச்சொல் அல்லது சாவி தொலைந்துவிட்டாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ வங்கி பொறுப்பேற்காது.

வங்கி லாக்கர்கள் என்பது பணத்தை வைப்பதற்காக அல்ல, அதாவது இங்கு பணம் வைத்திருப்பது ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு எதிரானது. வங்கி லாக்கரில் வாடிக்கையாளர் தனது பொருட்களை வைத்திருப்பார். வங்கி ஊழியரிடம் அதனை காட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால், லாக்கரில் எதை வைக்கக்கூடாது என்பதற்கான விதிகளை வாடிக்கையாளர் அறிந்திருக்க வேண்டும், இதனால் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.

லாக்கர் தொடர்பான வாடகை மாற்றம்

புதிய விதிகளின்படி வங்கிகளில் லாக்கரை வைப்பதற்கான புதிய ஒப்பந்தம் இனி முத்திரைத் தாளில் கையொப்பமிடப்படும். மேலும், லாக்கரின் வாடகையும் மாற்றப்பட்டுள்ளது. இது மாதம் ரூ.1350 முதல் ரூ.20000 வரை இருக்கும். மெட்ரோ நகரங்களில் சிறிய லாக்கருக்கு ரூ.1350, சிறியது ரூ.2200, மீடியம் ரூ.4000, கூடுதல் மீடியம் ரூ.4400, பெரியது ரூ.10000, பெரியது ரூ.20000 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.

கூட்டு பெயரில் லாக்கர்

கூட்டாக கணக்கு வைத்திருப்பதை போல, வங்கியில் கூட்டு லாக்கருக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்காக இருவரும் வங்கிக்கு வந்து கூட்டு குறிப்பாணையில் கையெழுத்திட வேண்டும். விதிகளின்படி, வங்கி லாக்கருக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களிடம் சேமிப்புக் கணக்கைத் திறக்கச் சொல்லலாம்.

நாமினி தொடர்பான வங்கி லாக்கர் விதிகள் என்ன?
லாக்கர் வைத்திருப்பவர் தனது லாக்கருக்கு யாரையாவது நாமினி ஆக்கியிருந்தால், அவர் இறந்த பிறகு அந்த நாமினிக்கு லாக்கரைத் திறந்து அதன் பொருட்களை வெளியே எடுக்க உரிமை உண்டு. வங்கிகள் நாமினி தொடரான ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பிறகு நாமினிக்கு இந்த அணுகலை வழங்குகின்றன.

பழைய லாக்கர் ஒப்பந்தத்தில், லாக்கரில் இருந்து பொருட்கள் காணாமல் போனாலோ, லாக்கருக்குள் இருக்கும் பொருட்கள் ஏதேனும் அவசர காலத்தில் அழிந்துவிட்டாலோ வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான இழப்பீடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, நிபந்தனைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அம்சம் உள்ளது.

மேலும் படிக்க | Amazon Great Indian Festival 2023: ஆண்களுக்கான ஆடைகளுக்கு 80% தள்ளுபடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News