Bajaj Auto உலகின் மிக மதிப்புமிக்க பணக்கார two-wheeler company

சந்தை மூலதனம் 1 லட்சம் கோடி ரூபாயை (சுமார் USD 13.6 billion) தாண்டியுள்ள, பஜாஜ் ஆட்டோ உலகின் மிக மதிப்புமிக்க இரு சக்கர வாகன நிறுவனமாக மாறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2021, 10:43 PM IST
  • பஜாஜ் ஆட்டோ இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம்
  • உலகின் மிக மதிப்பு நிறுவனமாக மாறிவிட்டது பஜாஜ் நிறுவனம்
  • 75 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டது பஜாஜ் ஆட்டோ
Bajaj Auto உலகின் மிக மதிப்புமிக்க பணக்கார two-wheeler company  title=

புதுடெல்லி: சந்தை மூலதனம் 1 லட்சம் கோடி ரூபாயை (சுமார் USD 13.6 billion) தாண்டியுள்ள, பஜாஜ் ஆட்டோ உலகின் மிக மதிப்புமிக்க இரு சக்கர வாகன நிறுவனமாக மாறியுள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி, ஆட்டோ நிறுவனங்களின் பங்கு விலை தேசிய பங்குச் சந்தையில் (National Stock Exchange (NSE)) 3,479 ரூபாயுடன் முடிவடைந்தது. அதன் சந்தை மதிப்பு 1,00,670.76 கோடி என்பதால், நிறுவனத்தின் மூலதனம் 1 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மூலதனத்தைக் கொண்ட உலகின் முதல் நிறுவனமாக ஆனது. 

1 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மூலதத்தை உலகில் வேறு எந்த நிறுவனமும் (Company) அடையவில்லை என்று ஆய்வாளர்கள் மேற்கோள் காட்டி பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read | Bajaj நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் Chetak பற்றி தெரியுமா?

Bajaj Auto ஸ்கூட்டர் நிறுவனம் 75 ஆண்டுகாலமாக இயங்கிவரும் ஒரு நிறுவனம். அதன் சரியான செயல்பாட்டைக் குறிக்கும் நிலையில் இந்த வளர்ச்சி இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

"மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் நிறுவனத்தின் கவனம் மற்றும் வேறுபாட்டின் உத்திகள் மற்றும் உலகளாவிய லட்சியங்களுடன் இணைந்து செயல்படுகிறது. TPM நடைமுறையில் அதன் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவை இன்று பஜாஜை உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க இரு சக்கர வாகன நிறுவனமாக உயரித்தியிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறோம் என்று நம்புகிறோம் "என்று பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார்.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் இந்தியாவில் இரு சக்கர சந்தை பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது வாகனங்களை ஏற்றுமதி (exports) செய்கிறது.

Also Read | 50 லட்சம் தடுப்பூசியை வாங்க பாரத் பயோடெக்குடன் பிரேசில் ஒப்பந்தம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News