PF உறுப்பினர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

EPF Wage Ceiling: லட்சக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) நிவாரணம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்புகளுக்கான அதிகபட்ச சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2024, 01:40 PM IST
  • தற்போதுள்ள பிஎஃப் ஊதிய உச்சவரம்பு என்ன?
  • புதிய முன்மொழிவின் விவரங்கள் என்ன?
  • ஊதிய உச்சவரம்பு அதிகரித்தால் பணியாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
PF உறுப்பினர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்:  ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஊழியர்களுக்கு கொண்டாட்டம் title=

EPF Wage Ceiling: மாதா மாதம் பிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. லட்சக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) நிவாரணம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்புகளுக்கான அதிகபட்ச சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த அறிவிப்பு இந்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போதுள்ள பிஎஃப் ஊதிய உச்சவரம்பு என்ன?

தற்போது, ​​பிஎஃப் -க்கான ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதை அரசாங்கம் ரூ.25,000 ஆக அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இதற்கான கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

புதிய முன்மொழிவின் விவரங்கள் என்ன?

இதற்கு முன் ஊதிய உச்சவரம்பு கடைசியாக செப்டம்பர் 1, 2014 -இல் திருத்தம் செய்யப்பட்டது. அந்த திருத்தத்தில் ரூ.6,500 ஆக இருந்த உச்சவரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த வரம்பை மேலும் அதிகரிக்க ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. இதை அதிகரிப்பதன் மூலம் ஊழியர்களின் சமூக பாதுகாப்பு நோக்கம் அதிகரிக்கப்பட்டு ஊழியர்களின் சேமிப்பும் அதிகரிக்கும். 

ஊதிய உச்சவரம்பு அதிகரித்தால் பணியாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:

தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஊதிய உச்சவரம்பு அதிகரிப்புக்கு ஒப்புதல் கிடைத்து அது அமலுக்கு வந்தால், அது பிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகமாக பலனளிக்கும். ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பும் இதன் மூலம் அதிகரிக்கும். இதன் காரணமாக ஊழியர்களின் எதிர்காலத்திற்கான சேமிப்பு மேம்படும், ஓய்வூதியத்திற்கான வலுவான நிதி அடித்தளம் உருவாகும். 

மேலும் படிக்க | காப்பீடு, விவசாயம், பரம்பரை சொத்து.... இந்த வழிகளில் வரும் வருமானத்திற்கு வரியே கட்ட வேண்டாம், முழு லிஸ்ட் இதோ

தற்போது ஊழியர்களுன் பங்களிப்பு எவ்வளவு?

தற்போது பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12% -ஐ பங்களிக்கிறார்கள். நிறுவனமும் இதே அளவு பங்களிப்பை அளிக்கின்றது. ஆனால், நிறுவனம் அளிக்கும் பங்களிப்பில் 3.67%  இபிஎஃப் கணக்கிலும்,  8.33% இபிஎஃஸ் கணக்கிலும் செல்கிறது. 

இபிஎஃப்ஓ தனது சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) பல வித நன்மைகளை அளிக்கின்றது. வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு ஆகியவையும் இவற்றில் அடங்கும். தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஊதிய உச்சவரம்பு அமலுக்கு வந்தால், இந்த நன்மைகளை மேலும் மேம்படும். இதன் மூலம் ஊழியர்களுக்கு அதிக நிதிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். 

இபிஎஃப்ஓ -வுக்கான சம்பள வரம்பை (Wage Ceiling) உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக உள்ளது. இந்த திட்டம் கடந்த பல ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு வந்தாலும், அமல்படுத்தப்படாமல் உள்ளது. இப்போது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த முன்மொழிவை மறுபரிசீலனை செய்து நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) வரம்பை அதிகரிக்கும். இதனால் ஊழியர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். இது ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை அளித்து, எதிர்காலத்திற்கான நிதி உத்தரவாதத்தை அளிக்கின்றது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அதிரடி ஏற்றம்: 25% உயர்ந்தன 13 அலவன்சுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News