ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். அதேபோல் ஆதார் அட்டையில் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் உள்ளது, இது மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை புகைப்படத்துடன் சேமிக்கிறது.
பொதுவாக இந்திய குடிமகன்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தங்கள் வங்கிக் கணக்குகளின் இருப்பை, கிளைக்குச் செல்லும் சிரமமின்றி ஆன்லைனில் சரிபார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஆதார் எண்களைப் பயன்படுத்தி இருப்பை பார்ப்பதன் மூலம், வங்கியின் இணையதளத்திற்கோ, கூகுள் பே, பேடிஎம் போன்ற ஆப்பிற்கோ சொல்லாமலேயே பேலன்ஸ் பார்க்கமுடிகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் இதற்கு இணைய வசதிகள் எதுவும் தேவை இல்லையாம்.
மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஆதார் மூலம் வங்கி இருப்பை இப்படி அறியுங்கள்
* முதலில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து *99*99*1# என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.
* பின்னர், வங்கிக் கணக்கை உங்கள் எண்ணுடன் இணைக்க 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
* உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும்.
* திரையில் வங்கி இருப்புடன் UIDAI இலிருந்து குறுஞ்செய்தி ஒன்றைப் பெறுவீர்கள்.
* அதில் நீங்கள் வங்கியில் உள்ள உங்கள் கணக்கின் இருப்பு நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.
எதிர்காலத்தில், UIDAI ஆதார் தகவலைப் புதுப்பித்தல், கார்டுடன் தொலைபேசி எண்ணை இணைப்பது, புகைப்படங்களைப் புதுப்பித்தல் மற்றும் பிற சேவைகளை வழங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ