இந்திய இரயில்வே போக்குவரத்தின் முக்கிய நாடிகளில் ஒன்றாக உள்ளது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயிலில் பயணிக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று ரயில்வே வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாக கூறப்படுகிறது. நகரத்திற்கு வெளியே சென்றாலும் அல்லது நகரத்துக்கு உள்ளேயே எங்காவது செல்ல திட்டமிட்டாலும், நம்மில் பலர் ரயிலில் பயணிக்க விரும்புகிறோம். ரயில்வேயில் பயணம் செய்வது எங்களுக்கு வசதியானது மட்டுமல்ல, சிக்கனமானதும் கூட. இந்திய ரயில்வே இந்தியா முழுவதும் பயணிகளுக்கு மிகவும் வசதியான பயணத்தை வழங்குகிறது.
இருப்பினும், கன்பர்ம் டிக்கெட்டை பெற சில மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறோம், ஆனால் சில காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருந்தால், முழுத் தொகையையும் பெற முடியுமா இல்லையா என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பெரிய கேள்வி. இது குறித்து பயணிகள் பலர் கூறுகையில், கன்பர்ம் ரயில் டிக்கெட்டினை கேன்சல் செய்யும் போது, முழுப் பணமும் திரும்ப கிடைக்கவில்லை என்பது தான்.
எனினும், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி விதிகளின்படி (Indian Railways), கன்பர்ம் டிக்கெட்டை ரத்து செய்வதன் மூலம் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் இதற்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை நீங்கள் கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதுவும் உங்கள் பெயர் மற்றும் இருக்கை முன்பதிவு ரயில்வே சார்ட் பட்டியலில் பட்டியலிடப்பட்டால், முழுப் பணத்தையும் எவ்வாறு திரும்பப் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்குமா?
IRCTC விதிகளின்படி, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்துசெய்தால், முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் இது சில சூழ்நிலைகளில் மட்டுமே சாத்தியமாகும். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வாங்கிய நிலையில், சார்ட் தயாரிக்கப்பட்டு, டிக்கெட்டை ரத்து செய்ய நினைத்தால், பயணிகளுக்கு பணத்தை முழுமையாக திரும்பப் பெற சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் உள்ளன.
இருப்பினும், இதற்காக, பயணிகள் முதலில் டிக்கெட் டெபாசிட் ரசீதைப் பெற வேண்டும். TDRஐப் பதிவுசெய்து ரத்துசெய்ததற்கான காரணத்தை பதிவு செய்த பின்னரே முழுப் பணத்தையும் திரும்பப் பெற முடியும்.
மேலும் படிக்க | Indian Railways: ஒரே டிக்கெட்டில் 56 நாட்களுக்கு இந்தியா முழுவதும் சுற்றலாம்
IRCTC இணையதளத்தில் TDRஐ எவ்வாறு தாக்கல் செய்வது?
1. IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உள்நுழையவும்.
2. இங்கே நீங்கள் புக் டிக்கெட் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
3. அதன் பிறகு TDR அல்லது டிக்கெட் டெபாசிட் ரசீது (icket Deposit Receipt), என்ற பிரிவை தேர்ந்தெடுக்கவும்.
4. ஒரு புதிய பக்கம் திறக்கும், இப்போது அதில் File TDR என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. My Transactions என்பதை கிளிக் செய்த பிறகு, TDR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ