திடீரென பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்போது, நண்பர்கள் அல்லது உறவினர்கள் உதவி செய்வார்கள் என்றாலும், பல சமயங்களில் அதுவும் பிரச்சனையாகிறது. சில சமயங்களில் அவர்களில் எவரிடமிருந்தும் நமக்கு உதவி கிடைக்காது. அந்த சமயத்தில், வங்கிக் கடன் கைக்கொடுக்கும். ஆனால், வங்கியில் கடன் வாங்குவது ஒரு நல்ல தேர்வாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் வங்கிக் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் (CIBIL) முக்கியமானதாக இருக்கிறது.
கடன் தேவைப்படுபவர்களுக்கும், கடன் வழங்குபவர்களுக்கும் இடையிலான நம்பிக்கையே, பணத்தை வட்டிக்கு கொடுப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது. தெரியாத ஒருவருக்கு ஒரு வங்கியோ அல்லது நிறுவனமோ கடன் கொடுக்கும்போது உங்கள் கடன் தகுதியை, சிபில் ஸ்கோர் மூலம் தெரிந்துக் கொண்டு அதன் அடிப்படையிலேயே கடன் கொடுக்கப்படுகிறது.
கடன் பெறுபவர் நம்பகமானவரா இல்லையா என்பதை கிரெடிட் ஸ்கோர் மூலம்தான் வங்கிகள் மதிப்பிடுகின்றன. கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெறுவது எளிதாக இருக்கும். பொதுவாக, சிபில் மதிப்பெண் 750க்கு மேல் இருந்தால் நல்லதாகக் கருதப்படுகிறது.
ஆனால், போதுமான சிபில் ஸ்கோர் இல்லாததால் கடன் கிடைக்காத நிலையில், வேறு இடங்களிலும் இருந்தும் கடன் கிடைக்காமல் இருக்கும்போது என்ன செய்வது என்று கவலை அதிகமாகும்.
மேலும் படிக்க | சிபில் ஸ்கோர் 750க்கு மேல் இருக்க வேண்டுமா? இந்த 7 Tips டிரை பண்ணிப் பாருங்க!
உங்களுடைய சிபில் ஸ்கோர் பூஜ்ஜியமாக இருந்தாலும் கடன் வாங்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதிலும் சில நிமிடங்களில் கடனைப் பெற உதவும் சில கடன் செயலிகளைப் பற்றிய தகவல்களைப் பற்றியும் அது தொடர்பான முக்கியமான அம்சங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் இருந்தாலும், அதாவது உங்கள் சிபில் மதிப்பெண் 0 ஆக இருந்தாலும், ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் உள்ளன. எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் கடன் கொடுக்கும் இந்த செயலிகளின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இவை முற்றிலும் பாதுகாப்பானது, உங்கள் தேவைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், அதைப் பெற நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை.
0 சிபில் ஸ்கோர் லோன் விண்ணப்பத்தில் கடன் பெறுவதில் பல நன்மைகள் இருந்தாலும், இந்தக் கடனை வாங்குவதற்கு முன்னதாக சில முக்கியமான விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | CIBIL ஸ்கோரை பெரிதும் பாதிக்கும் கிரெடிட் கார்டு செட்டில்மெண்ட்... நீங்கள் செய்ய வேண்டியது என்ன.
0 சிபில் ஸ்கோர்
எந்தவொரு 0 சிபில் லோன் செயலியின் மூலம் நீங்கள் கடன் வாங்க விரும்பினாலும், அதை கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்யுங்கள்.
கடனுக்கான வட்டி விகிதம்: 0 CIBIL ஸ்கோர் லோன் செயலிகளில் இருந்து கடன் பெற, நீங்கள் ஆண்டு அடிப்படையில் 36% வரை வட்டி செலுத்த வேண்டும், வட்டி விகிதம் சுமார் 20% முதல் தொடங்குகிறது.
இந்த செயலிகள் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்களை கொடுப்பதில்லை. அவை...
கடனுக்கான அபராதம்: நீங்கள் கடனை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால், அதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | Instant Loan: ஆர்பிஐ-அங்கீகாரம் பெற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற தேவையான ஆவணங்கள்
கடனுடன் தொடர்புடைய கூடுதல் கொடுப்பனவுகள்: இந்தக் கடனைப் பெறுவதற்கு, முதல் கடனுக்கு முன் செய்ய வேண்டிய தேவையில்லாத கூடுதல் கட்டணங்கள் எதையும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை.
செயலாக்கக் கட்டணம்: குறைந்த சிபில் மதிப்பெண்கள் உள்ளவர்கள் கடனைப் பெற ரூ. 9,000 + GST செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், 10% அல்லது அதற்கு மேல் அதாவது 10,000 ரூபாய் வரை செயலாக்கக் கட்டணம் வரலாம்.
GST: 0 சிபில் ஸ்கோர் உள்ளவர்கள் கடன் வாங்கினால், அனைத்து செலவுகளுக்கும் 18% GST செலுத்த வேண்டும், இது கட்டாயமாகும்.
மேலும் படிக்க | கருவில் இருந்தே துரத்திய பகை..! 19 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த மகன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ