ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது. ஒவ்வொரு மாதமும் நடப்பது போலவே, இந்த மாதமும் 1 ஆம் தேதி முதல் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. கேஸ் சிலிண்டர் விலை தவிர, வங்கி அமைப்பு தொடர்பான சில புதுப்பிப்புகளும் இதில் அடங்கும். விதிகளில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர, மற்ற மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் அதிக விடுமுறைகள் இருக்கும். ஆகஸ்டு 1 முதல் சாமானியர்களை பாதிக்கும் வகையில் வரப்போகும் மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பேங்க் ஆஃப் பரோடா காசோலை கட்டண முறை
உங்கள் கணக்கு பாங்க் ஆஃப் பரோடாவில் (BOB) இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். இந்த ஆகஸ்ட் 1 முதல், பாங்க் ஆப் பரோடாவில் காசோலை மூலம் பணம் செலுத்தும் விதிகள் மாற உள்ளன. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 1 முதல், ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை கொண்ட காசோலைகளுக்கு நேர்மறை ஊதிய முறை, அதாவது பாசிடிவ் பே சிஸ்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பாங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இதன் கீழ், வங்கி காசோலை தொடர்பான தகவல்களை எஸ்எம்எஸ், நெட் பேங்கிங் அல்லது மொபைல் ஆப் மூலம் கொடுக்க வேண்டும்.
சமையல் எரிவாயு விலை
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி விலையில் திருத்தம் செய்யப்படுவடு போலவே, இந்த முறையும் ஆகஸ்ட் 1 முதல் எரிவாயு சிலிண்டர் விலை மாற வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நிறுவனங்கள் வீட்டு உபயோக மற்றும் வணிக காஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றக்கூடும். இம்முறை சிலிண்டர் ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாய் வரையிலான மாற்றம் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை வணிக எரிவாயு சிலிண்டரின் விலை மலிவானது. எனினும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.
18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
இந்த முறை ஆகஸ்ட் மாதம் முஹர்ரம், ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விநாயக சதுர்த்தி என பல பண்டிகைகள் வருகின்றன. இதன் காரணமாக இந்த முறை பல்வேறு மாநிலங்கள் உட்பட மொத்தம் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) தனது பட்டியலில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஆகஸ்ட் மாதம் ஊழியர்களுக்கு கிடைக்கும் 4 பம்பர் செய்திகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ