PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதி உதவித்திட்டம் அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த பணம் தலா ரூ.2000 வீதம் 3 சம தவணைகளில் பயனாளிகளின் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த பணம் DBT முறையின் மூலம் விவசாயிகளின் கணக்கில் நேரிடையாக செலுத்தப்படுகிறது. விவசாயிகளின் கணக்கில் இதுவரை 14 தவணைகள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 15வது தவணை அனுப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சரிப்பார்த்துக் கொள்ளலாம்.
பிஎம்-கிசான் யோஜனாவின் 15வது தவணை நவம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 14வது தவணை இந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் (PM Narendra Modi) வெளியிடப்பட்டது. பிப்ரவரி 2023 இல் வெளியிடப்பட்ட 13வது தவணைக்கு 5 மாதங்களுக்குப் பிறகு ஜூலையில் PM-Kisan கீழ் 14வது தவணை வந்தது. 12வது தவணை அக்டோபர் 2022 இல் வெளியிடப்பட்டது, அதே சமயம் 11வது தவணை மே 2022 இல் வெளியிடப்பட்டது.
PM-Kisan திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் 2,000 ரூபாய் பெறுகிறார்கள். இது ஆண்டுக்கு 6,000 ரூபாய். இந்தப் பணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. PM-Kisan திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசாங்கம் இதுவரை மொத்தம் ரூ.2.50 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. இந்த திட்டம் பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க | ரயில்வே ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: தீபாவளி போனஸை தொடர்ந்து அதிரடி டிஏ ஹைக்
PM கிசானின் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை முதலில் சரிபார்க்கவும்.
1 முதலில் நீங்கள் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும். https://pmkisan.gov.in/ என்ற இந்த இணைப்பிற்கு நேரடியாகச் செல்லலாம்.
2 இதற்குப் பிறகு, வீட்டில் இருந்த படியே உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இங்கே உங்களிடம் பதிவு எண் கேட்கப்படும்.
3 பதிவு எண் உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் பதிவு எண்ணைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான விருப்பத்தை கிளிக் செய்யவும். மொபைல் எண்ணை உள்ளிடவும், பின்னர் கேப்ட்சாவை உள்ளிடவும்.
4 இதற்குப் பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். OTP ஐ உள்ளிட்ட பிறகு உங்கள் பதிவு எண் தெரியும்.
5 பிறகு Know Your Status என்பதைக் கிளிக் செய்து, பதிவு எண்ணை உள்ளிட்டு உங்கள் நிலையைச் சரிபார்க்கவும்.
6. PM கிசான் சம்மான் நிதி யோஜனாவில் உங்கள் பெயரைப் பார்க்க விரும்பினால் அல்லது உங்கள் கிராம மக்கள் அனைவரின் பெயர்களைப் பார்க்க விரும்பினால், நீங்கள் https://pmkisan.gov.in/ க்குச் செல்ல வேண்டும்.
7. இதற்குப் பிறகு, வலது பக்கத்தில் தெரியும் பயனாளிகள் பட்டியல் என்ற விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். இந்த பட்டியலில் கிளிக் செய்த பிறகு, உங்கள் மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
8 . இதற்குப் பிறகு, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் பலனைப் பெறும் கிராம மக்கள் அனைவரின் பெயர்களையும் நீங்கள் காண்பீர்கள்.
மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹெல்ப்லைன் எண்ணில் நீங்கள் அழைக்கலாம்
நீங்கள் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் விண்ணப்பித்திருந்தால். அதன் நிலையை அறிய 155261 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இங்கே நீங்கள் அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ