வங்கி, நிதி, தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள் இன்று (வெள்ளிக்கிழமை, டிசம்பர் 1) முதல் மாறுகின்றன. இந்தப் புதிய விதிகள் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, உங்கள் நிதிநிலையிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.
டிசம்பர் 2023 இல் மாறும் 5 நிதி மற்றும் தொழில்நுட்ப விதிகள் மற்றும் உங்கள் நிதியில் ஏற்படும் தாக்கங்கள் விபரம்
சிம் கார்டு விதி மாற்றம் டிசம்பர் 2023
புதிய சிம் கார்டு விதிகள் (SIM Card Rule), சிம் கார்டு டீலர்களின் கட்டாயச் சரிபார்ப்பு மற்றும் மொத்தமாக வழங்கும் தொலைபேசி இணைப்புகளுக்கான வழங்கலை ரத்து செய்தல் உள்ளிட்டவை இந்தியாவில் டிசம்பர் 1, 2023 முதல் செயல்படுத்தப்பட உள்ளன. சிம்மிற்கான இந்த புதிய விதிகளை தொலைத்தொடர்புத் துறை (DoT) அறிவித்துள்ளது. பயனர்கள். இந்த விதிகள் முதலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லாக்கர் ஒப்பந்தங்களின் விதி மாற்றம் டிசம்பர் 2023
வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான லாக்கர் ஒப்பந்தங்களை (Locker Agreements Rule) புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும் டிசம்பரில் முடிவடைகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்தது. ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதற்கான அசல் காலக்கெடுவான டிசம்பர் 1 ஆம் தேதி வரை, திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கையெழுத்திடாதது கவனிக்கப்பட்டதால், காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
UPI ஐடி விதி மாற்றம் டிசம்பர் 2023
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வழிகாட்டுதல்களின்படி, செயல்படாத ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) ஐடிகள் மற்றும் தொடர்புடைய UPI எண்கள் டிசம்பர் 31, 2023 என்ற காலக்கெடுவிற்க்குள் செயலிழக்கச் செய்யப்படும் (UPI ID Rule). வேறுவிதமாகக் கூறினால், நீண்ட நாட்களாக யுபிஐ ஐடி மூலம் பரிவர்த்தனை செய்யாத பயனர்கள் தங்கள் UPI ஐடியை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இல்லை என்றாலா, அத்தகைய செயல்படாத கணக்குகளை UPI வசதியை வழங்கும், அனைத்து வங்கிகள், மூன்றாம் தரப்பு செயலிகள் டிசம்பர் 31, 2023க்குப் பிறகு அத்தகைய ஐடிகளை செயலிழக்கச் செய்யும் அல்லது ரத்து செய்யும்.
மேலும் படிக்க | 25 வயதாகும் வரை மாத ஓய்வூதியம்: குழந்தைகளின் நலன் காக்கும் EPFO திட்டம்
ஆதார் அட்டை விதி மாற்றம் டிசம்பர் 2023
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை டிசம்பர் 14 ஆம் தேதி வரை myAaadhar போர்ட்டல் மூலம் இலவசமாக மாற்றிக்கொள்ள முடியும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதாரை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 14 வரை நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பு அதன் முந்தைய காலக்கெடுவான செப்டம்பர் 14, 2023 என்பதை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிர் வாழ் சான்றிதம் விதி மாற்றம் டிசம்பர் 2023
ஜீவன் பிரமான் பத்திரம் அல்லது உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 30. ஓய்வூதியம் பெறுவோர், தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு இந்த சான்றிதழை சமர்பிக்க வேண்டியது அவசியம். காலக்கெடுவைத் தவறவிட்ட பிறகும் நீங்கள் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்றாலும், மத்திய ஓய்வூதியச் செயலாக்க மையங்களில் (CPPC) உங்கள் உயிர் வாழ் சான்றிதழை சமர்பித்த பிறகுதான் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ