Gold Rate Today Tamil Nadu : உலகளவில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில், இன்று இதன் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. தங்கத்தின் இன்றைய விலை நிலவரப்படி, தமிழகத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.1,600 விலை குறைந்து மொத்தம் ரூ.53,600க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை, ரூ.145 குறைந்து ரூ.6,700ஆக விற்கப்படுகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை:
இந்தியர்களையும், அவர்களுக்கு தங்கத்தின் மீதிருக்கும் அதீத ஆர்வத்தையும் பிரிக்கவே முடியாது. நம் ஊரில், தங்கம் என்பது வெறும் ஆபரணமோ அல்லது அழகு பொருளோ இல்லை. பல நடுத்தர குடும்பத்தினருக்கு தங்கம் ஒரு பெரிய முதலீடாகும். பல வருடங்களுக்கு முன்பு வரை சில்லறை காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த தங்கம், இன்று இமாலய உயரத்தை எட்டி விட்டது. அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருந்ததே அன்றி, குறைந்தபாடில்லை. வீட்டில் திருமணம் வைத்துள்ளவர்கள், சொத்து வாங்க ஆசைப்பட்டவர்களையெல்லாம் ஏமாற்றமடைய செய்யும் வகையில் இருந்தது தங்கம் விலை.
சில நாட்களுக்கு முன்பு, தேர்தல் சமயத்தில் தங்கத்தின் விலை ரூ.55,000த்தை தாண்டி இருந்தது. இந்த நிலையில், நேற்றுதான் இதன் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன், ரூ.54,760 ரூபாய்க்கு விற்கப்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.6,845க்கு விற்பனையானது.
திடீர் விலைக்குறைவு:
தங்கத்தின் விலை குறைய வாய்ப்பே இல்லை, என பல பொருளாதார நிபுணர்களும், தமிழகத்தில் உள்ள தங்க நகை விற்பனையாளர்களும் தெரிவித்து வந்தனர். தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்து, பல்வேறு மாநிலங்களில் நடைப்பெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தங்கத்தின் விலை ரூ.65,000த்தை எட்டும் என்றும் ஒரு சிலர் கணித்தனர். ஆனால், அந்த கணிப்புகளை தவிடுபொடியாக்கும் வகையில் இன்றைய விலை நிலவரம் இருக்கிறது. பல நாட்களுக்கு பிறகு, தங்கத்தின் விலை ஒரே நாளில் 1,000 ரூபாய்க்கு மேல் சரிந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,160 ரூபாய் குறைந்து, 53,600 ரூபாய்க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மேலும் படிக்க | ரூ.5000த்தை வைத்து 5 கோடி சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?
தங்கம் விலை உயர்ந்ததற்கான காரணம் என்ன?
தங்கம் விலை உயர்வதற்கான காரணம் குறித்து, பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் ஒரு சமூக ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், கடந்த ஆண்டு தங்க விலை ஏற்றத்திற்கான காரனம் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் இடையே நடந்த போர்தான் என்று தெரிவித்தார். அதே போல, இந்த ஆண்டின் தங்க விலை ஏற்றத்திற்கான காரணம் குறித்தும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். மத்திய வங்கியின் கொள்முதல், டாலர் மதிப்பின் வீழ்ச்சி, சீனாவின் தேவை, அமெரிக்காவின் வட்டி விகித குறைப்பு உள்ளிட்டவைதான் இதற்கு முக்கிய காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டிற்கு பிறகு, தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தங்கத்தின் விலை குறைவது எப்போது? கிடுகிடுவென விலையேற காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ